அமெரிக்காவும், இஸ்ரேலும், இஸ்லாமிய தேசமும்….

iran iraq– MJ

லண்டன்: இப்போது உலகம் காஸாவை மறந்துவிட்டது. உலக முஸ்லிம்களும் காஸாவை மறந்து தனது சொந்த விடயங்களில் மீண்டும் கவனம் செலுத்திவரும் இந்நிலையில் உலக ஜாம்பவான் என மார்பு தட்டும் அமெரிக்காவின் இராணுவ விளையாட்டை கொஞ்சம் அலசிப்பார்ப்போம்.

இரண்டாம் உலகப் போரின் வெற்றியில் அமெரிக்காவின் பலம் பேசப்பட்டது. சோவியத் யூனியன் எனும் பிரமாண்டமான இராச்சியமாக இருந்த ரஷ்யாவின் பலம் மறைந்தது. இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஜேர்மனை வீழ்த்துவதில் சோவியத் யூனியன் இராணுவம் எடுத்த பிரயத்தனம் அளவிடமுடியாதவை.

ஆங்கில ஊடகங்களின் எழுச்சி, செய்திச்சேவை, உலக மக்களின் ஆங்கில அறிவு இவைகளை வைத்து அமெரிக்காவின் ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு எழுதி, தாங்களே உலக வல்லரசு எனவும், பலம் பொருந்திய ஜேர்மனியையும், அந்நாட்டுத் தலைவர் அடோல்ஃப் ஹிட்லரையும் தோற்கடித்தோம் எனவும் எழுதி, எழுதி உலகின் புகழுக்கு அமெரிக்கா சென்றது.

hitler-and-eva-600x330[1]
அடோல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன்

அதுமாத்திரமன்றி, அமெரிக்காவை எதிர்க்க நினைக்கும் நாடுகளுக்கு அனுகுண்டுதான் பதில் தரும் எனவும், எங்களை எதிர்த்தால் எதிர்க்கும் நாடுகளுக்கு ஹிரோஸிமாவின் நிலையே ஏற்படும் எனவும் அமெரிக்க அன்று எச்சரித்திருந்தது.

இதனைக் கண்ட அரபு வலயம், மற்றும் பிர நாடுகளும் அமெரிக்காவே உலகுக்குத் தலைவன் என்பதை ஏற்றுக்கொண்டு, தங்கள் நாடுகளின் எண்ணற்ற பொருளாதாரங்களையும், வளங்களையும் வாரி வழங்க அமெரிக்க படிப்படியாக முன்னேறியது.

1966இல் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி எடுத்ததோடு உலகம் அமெரிக்காவை வியக்க ஆரம்பித்தது.

அதன் பின்னர் 1955 இல் இருந்து 1975 வரை அதாவது 19 வருடங்களும் 7 மாதங்களும் வியட்னாமில் மூக்கை நுழைத்து, தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்கா இரவோடிரவாக வெளியேறியது. சுமார் 20 வருடங்கள் இடம்பெற்ற வியட்னாம் யுத்தத்தில் வடக்கு வியட்னாம் போராளிகளே வெற்றிபெற்றனர். இது ஓர் வரலாற்றுச் சம்பவமாக வியட்னாமில் பதியப்பட்டிருக்கின்றது.

vietnam
வியட்னாம் போரில் அமெரிக்க படையினர்

தோல்வியைத் தாங்க முடியாத அமெரிக்காவிற்கு அடுத்தகட்ட நகர்வுகள் தேவைப்பட்டன. அமெரிக்காவிலும், வியட்னாமிலும் மற்றும் சர்வதேசத்திலும் வியட்னாம் போர் அமெரிக்காவுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

வியட்னாம் போர் அமெரிக்காவுக்கு பல சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. ஆட்பலம் குறைவு, பொருளாதாரம் சரிவு, ஆளும் கட்சிக்குள் பிளவு இவ்வாறு அமெரிக்காவின் நிலை இருந்தது.

vietnam (2)
காயமடைந்த தனது சகாவை தாங்கியிருக்கும் வியட்னாம் போராளி

அரபுவலயத்தில் காலூன்றி, சவுதி அரேபியாவுடன் ஒப்பந்த அடிப்படையில் செய்துகொண்ட எண்ணெய் வர்த்தகம் அமெரிக்காவுக்கு கைகொடுத்தது. இராணுவ ரீதியில் ஒரு நாட்டுடன் மோதிப்பார்ப்பதைவிட, அரபுவலயத்தில் தந்திரமாக நுழைந்து எண்ணெய்வளத்தை கைப்பற்றினால் போதுமானது என அமெரிக்காவின் சிந்தனை செல்கிறது.

வியட்னாமின் பயங்கரத் தோல்வியின் பின்னர் அமெரிக்கு தனிமையில் எந்த நாடுகளுடனும் போர்புரிய முடியாத நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் பின்னர் இன்றுவரைக்கும் யுத்தம் என்ற தனது விசுவாச ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா கைக்குள்போட்டுக்கொண்டே யுத்தம் என்ற பேரில் நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது.

சவுதி அரேபியாவை மாத்திரம் நம்பி எத்தனை நாட்களுக்கு எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்வது என்ற நிலையில், எப்படியாவது அரபுவலயத்தில் கால்பதிக்க வியூகம் மேற்கொள்கிறது அமெரிக்கா.

எண்ணெய் ஏற்றுமதியிலும் எண்ணெய் வளத்திலும் சவுதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாடு ஈரான் மற்றும் ஈராக் ஆகியனவாகும். பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இவ்விரு நாடுகளிலும் எண்ணெய் வளம் தேவைக்கு மிஞ்சிய அளவில் இருக்கின்றது. ஒன்றில் ஈரான் அல்லது ஈராக்கை வீழ்த்தி எண்ணெய் வர்த்தகத்தைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிடுகிறது.

iran iraq (2)
ஈரான்-ஈராக் போர் எல்லை

1980 இல் இருந்து 1988 வரைக்கும் சுமார் 8 வருடங்கள் ஈரான்-ஈராக் யுத்தம் இடம்பெறுகிறது. தேவையில்லாத ஓர் பிரச்சினைக்காக இரு நாட்டுப்படைகளும் தங்களது எல்லையிலிருந்து 8 வருடங்கள் போராடி வந்தனர். உப்புசப்பில்லாத இப்போராட்டம் அமெரிக்காவால் திட்மிட்டு நடாத்தப்பட்டது.

இந்நேரத்தில் ஈரானின் படையை ரூஹூல்லாஹ் கொமைனியும், ஈராக் படையை ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனும் வழிநடாத்தி வந்தனர். சுன்னி, ஷியா ஆகிய இருவருக்குமிடையிலான போர் என வெளிப்படையாக இச்சண்டை இடம்பெற்றது.

iran iraq
ஈரான்-ஈராக் யுத்தத்தில் தனது இராணுவத்தை வழிநடாத்தும் சதாம்

ஈராக்கிற்கு சோவியத் யூனியன் இராணுவத் தளபாடங்களையும் இராணுவத் தந்திரங்களையும் வழங்கி வந்தது.

இறுதியில் வெற்றியோ, தோல்வியோ இல்லாத நிலையில் இருநாடுகளும் உலக ஜாம்பவான்களை அழைக்காமலேயே சமரசம் செய்துகொண்டமை அமெரிக்காவுக்கு மற்றுமொரு பலத்த அடியாக அமைந்தது.

அமெரிக்கா இடையில் தலையிட்டு எடுக்க முயன்ற முயற்சிகள் அமெரிக்காவுக்கு தோல்வியில் முடிந்தன. அமெரிக்காவின் நச்சரிப்புக்கள் ஈராக் வலயத்திற்குள் ஊடுறுவியதால், அமெரிக்காவின் யுத்தக் கப்பல் ஒன்றை 17, மே, 1987 ஈராக் ஈராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது. கப்பலில் இருந்த இத்தாக்குதலில் 33 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், 21 பேர் காயமடைந்திருந்தனர். ஈராக்கின் பலம் அன்றுதான் அமெரிக்காவுக்குத் தெரிந்தது. அமெரிக்கா ஈராக் மேல் ஓர் கண் வைத்து பின்வாங்கியது.

ஈராக்கின் பலம் அரபு வலயத்தில் அமெரிக்கா ஆதரவு நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. யுத்ததைத்தை முடித்துக்கொண்ட ஈரான் தனது இராணுவ, பொருளாதார பலத்துடன் நாட்டை வளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

அமெரிக்காவின் காலணித்துவ நாடுகள் போல் அமைந்து வந்த குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் கொள்கைகள் ஈராக்கிற்கு பிடிக்கவில்லை. ஈராக்கை வீழ்த்த இவ்விரு நாடுகளும் அமெரிக்காவிற்கு களம் அமைத்துக் கொடுப்பதில் ஈடுபட்டுவருவதை உணர்ந்த ஈராக், இருநாடுகளுக்கும் தனது பலத்தைக் காட்ட வெளிக்கிட்டது.

ஈராக்கிற்கு எப்போதும் இருக்கும் கொள்கையே, பலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும். சதாமின் ஆட்சியில் பலஸ்தீனத்தை இஸ்ரேலில் இருந்து மீட்டெடுப்பதும் ஓர் கொள்கையாகவே ஈராக்கிடம் இருந்தது.

gulf 1991 iraq
வளைகுடா யுத்த்தில் ஈராக்கிய டாங்கிப்படை

ஆகஸ்ட் 02, 1990. அதிகாலைப் பொழுது விடிகிறது. ஒரு இலட்சம் ஈராக்கிய படைகள், 700 யுத்த டாங்கிகளுடன் குவைத்திற்குள் ஊடுறுவுகின்றனர். குவைத் நகரத்தின் இதயப் பகுதியும் ஏனைய இடங்களும் ஈராக் இராணுவத்திடம் வீழ்கிறது. சரமாரியான தாக்குதல்களை ஈராக் தொடுத்தது. குவைத் இராணுவம் பின்வாங்கியது. குவைத் நாட்டின் அமீர் செய் ஜாபிர் மயிரிழையில் சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றார். இவ்வேளையில் அமீரின் இளைய சகோதரர் பலியானார். இத்தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். குவைத் நகரம் ஈராக்கின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது.

குவைத்தில் கால்பதித்த ஈராக் படையை உடனடியாக வாபஸ்பெற்று ஈராக்கிற்கு அழைக்கும்படி அமெரிக்கா ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனிடம் கேட்டது.

kuwait
ஈராக்கின் தோல்வியை வெற்றிவிழாக் கொண்டாடும் குவைத்திகள்

‘பலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறினால் எமது படை குவைத்திலிருந்து வெளியேறும். அதுவரை போருக்குத் தயார்’ என இரும்பு மனிதராகப் போற்றப்பட்ட சதாம் ஹூஸைன் அமெரிக்காவுக்கு சவால் விட்டார். அமெரிக்கா ஆடிப்போனது.

அமெரிக்காவில் தங்கியிருக்கும் அரபு நாடுகள் சவுதி அரேபியாவின் தலைமையிலும், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் தலைமையிலும், தங்களது படைகளை சவுதி அரேபியாவில் ஒன்று சேர்த்து ஈராக்கை குவைத்திலிருந்து அழிக்க கூட்டுப்டையை ஏற்படுத்தியது.

உலகின் 34 நாடுகளில் இருந்தும் ஈராக் இராணுவத்தை எதிர்க்க சவுதி அரேபியா தளம் அமைத்தது. ஆகஸ்ட் 02, 1990-28-02-1991வரை இப்போர் இடம்பெற்றது.

அமெரிக்காவின் வான் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஈராக் குவைத்திலிருந்து பின்வாங்கியது.

இந்தப் பின்வாங்குதலுடன் ஈராக்கின் இராணுவப்பலம் வீழ்த்தப்படுகிறது. ஈராக்கில் இருக்கும் சிறுபான்மையினரை கைக்குள் போட்டுக்கொண்ட அமெரிக்கா, ஈராக்கின் இராணுவ உளவுகளில் ஆர்வம் காட்டுகிறது. இதன் பின்னணி, ஓர் தலைவராகவே இருந்த சதாம் ஹூஸைனுக்கான எதிர்ப்பலைகள் பின்னர் மெதுமெதுவாக உதயம்பெற ஆரம்பித்தன. குர்திஸ், ஷியா பிரிவினரைப் பலப்படுத்தி, ஈராக்கைத் துண்டாடும் பணியில் அமெரிக்கா முழுமூச்சாக செயற்பட்டது.

saddam
ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைன் தூக்கிலிடப்படும்போது

அதன் பின்னர் 2003 இல் ஈராக்கில் இலகுவாக நுழைந்த அமெரிக்காவும் அதன் கூட்டணியும் ஈராக்கை முழுவதுமாகக் கைப்பற்றி தனது அதிகாரத்தை நிலைநாட்டியது.

சிறுபான்மையினரை ஆட்சியிலமர்த்தி சதாம் படையினரை வேட்டையாடியது அமெரிக்கா. அமெரிக்காவுக்கு சவால்விட்ட ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைன் அமெரிக்காவின் தீர்ப்பால் தூக்குத் தண்டணைக்கு உட்பட்டார்.

சதாம் போய்விட்டார். சதாம் இல்லாததால் இஸ்ரேலோ, குவைத்தோ அல்லது சவுதியோ இனிமேலும் அஞ்சத்தேவையில்லை என அமெரிக்கா அரபு வலயத்துக்கும் தனது வலக்கை இஸ்ரேலுக்கும் எடுத்துக்கூறியது.

இதற்கிடையில் ஆப்கானில் ஓர் படையைத்திரட்டி சோவியத் யூனியனை வீழ்த்த அமெரிக்க எடுத்த முயற்சிதான் ஒஸாமா பின்லாடனின் உருவாக்கமாகும்.(1970-1980)

நேருக்கு நேராக சோவியத் யூனியனை எதிர்க்க முடியாத அமெரிக்காவுக்கு கெரில்லாக்களை வைத்து ரஷ்யாவுக்கு தலையிடு கொடுக்க ஏவப்பட்ட படையே பின்னர் அல்கைதாவாக உருவாகி அமெரிக்காவுக்கு எதிராக மாறியதும் வரலாறு.

isis
இஸ்லாமிய தேசப்படை

ஈராக்கில் எடுப்பதை எடுத்துவிட்டோம். இனிமேல் அங்கு எதுவுமில்லை. அடுத்தது ஈரான்தான் இருக்கிறது என்ற மூச்சுடன் ஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.

அமெரிக்காவின் வெளியேற்றத்துடன் தற்பொழுது ஈராக்கில் பிரமாண்டமான போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதம் என்றாலே அடுத்தநிமிடம் காலடி எடுத்து களமிறங்கும் அமெரிக்கா, ஈராக் உள்ளுர் கலவரத்தில் கடந்த 6 மாதங்களாக கண்டுகொள்ளாமலேயே இருந்து வந்தது.

ஆனாலும் இஸ்லாமிய தேசத்துப் போராளிகளால் தங்களது இரு பிரஜைகள் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்தன் பின்னரே அமெரிக்கா இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக திரும்பிப்பார்த்திருக்கிறது.

ஆனாலும், இஸிஸ் அமைப்பின் ஈராக் ஊடுறுவலையடுத்து அரபு நாடுகளின் அச்ச சூழ்நிலை அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது.

அமெரிக்கா எதிர்பார்த்தது போலவே அரபு நாடுகள் ஒன்றுகூடி அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் வரவழைக்கும் சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்கையில், இஸ்ரேலைவைத்து பலஸ்தீனத்தை ஆட்டம்காண வைத்த அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தச்சொல்லிவிட்டு, தற்பொழுது இஸ்லாமிய தேசத்தை நோக்கை காய் நகர்த்த திட்டமிட்டிருக்கிறது.

இப்பொழுது அமெரிக்காவின் நோக்கம் சிரியாவின் ஆளும் அரசாங்கத்தை வீழ்த்தி சிரியாவைக் கைப்பற்றுவதுடன், சிரியாவில் சில பகுதிகளில் போராடி வரும் இஸிஸ் அமைப்பினரை கொன்றொழிப்பது.

இதேபோல் ஈராக்கில் ஆளும் அரசாங்கம் அமெரிக்காவுக்கு பிரச்சினையல்ல. எனவே நேரடியாகவே இஸிஸ் அமைப்பினருடன் சண்டையிட்டு, ஈராக்கில் மீண்டும் காலடி எடுத்து அங்கு தனது நிலையை பலப்படுத்துவது எனும் நோக்கில் காய் நகர்த்தப்படுகிறது.

ஈராக்கில் ஓர் நிலையைப் பலப்படுத்தி எப்படியாவது ஈராணைச் சீண்டிப்பார்க்கும் மற்றுமொரு வியூகமே அமெரிக்காவின் பிரதான நோக்கம். சுமார் 40 வருடங்களாக ஈராணை வீழ்த்த அமெரிக்கா எடுத்துவரும் தந்திரத்தில் ஈராண் வீழுமா என்பதை பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.

அமெரிக்காவுக்கு சவால்விட்ட அத்தனை அரபு வலய தலைவர்களும் ஆட்சியிலிருந்து தூக்கப்பட்டு, சிலர் கொல்லப்பட்டும் விட்டனர். ஆனால் ஈரான் இதுவரைக்கும் அமெரிக்காவின் பிடியில் விழவில்லை. ஈரானை அமெரிக்கா வீழ்த்தினால் அரபு வலயம் ஓர் அச்சமற்ற வலயமாக அமையும் என்பதில் அரபுவலய நாடுகள் நப்பாசை கொண்டுள்ளன.

அன்று ஈரானையும் ஈராக்கையும் மோதவிட்டு லாபத்தைப் பெற முடியாமல் போன அமெரிக்காவுக்கு இன்று அதிகமான இலாபம் கிடைத்திருக்கின்றது. 2003 இல் அமெரிக்கா ஈராக்கில் நுழைந்ததில் இருந்து இஸ்லாமிய தேசம் வரைக்கும் பல இலட்சம்பேர் கொன்றொழிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்கா செய்ய வேண்டியதை முஸ்லிம்கள் குழக்களாகப் பிரிந்து சகோதரர்களைக் கொன்றொழிக்கும் அமெரிக்காவின் திட்டம் சுமார் 40 வருடங்களின் பின்னர் நிறைவேறுகிறது. அமெரிக்கா ஈராக்கில் காலடி எடுத்துவைப்பதைப் பார்ப்பிலும், ஈராக்கிற்கு வெளியிலிருந்து குழக்களை இயக்குவதிலேதான் அமெரிக்காவுக்கு இலாபம் அதிகம். ஆனாலும் அரபு வலய அழைப்பிற்கும், தனது ஊடகவியலாளர்களின் பெற்றோர்களுக்காகவும் ஈராக்கில் மீண்டும் காலடிவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

usa

அமெரிக்கா தனது விளையாட்டை திசை திருப்ப நினைத்தால் இஸ்ரேல் மீண்டும் பலஸ்தீனைத் தாக்கும். இவ்வாறு கடந்த 40 வருடங்களாக அரபு வலயத்தில் அதாவது எண்ணெய் வயல் நிலங்களில் வேளாண்மைச் செய்ய அமெரிக்கா அதிகப் பிரயத்தனம் எடுத்து வருகின்றது.

அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய நகர்வு இருக்கின்றது. அதுதான் அமெரிக்கா விளையாட இருக்கும் ரஷ்யா-சிரியா-ஈரான் இணைந்த சமர். இதுவே உலக முடிவுக்கு வழிசமைக்கலாம்! இன்ஷா அல்லாஹ் பிரிதொரு ஆக்கத்தில் சந்திப்போம்.

Published by

Leave a comment