பாகிஸ்தான் இருபது20 அணியின் தலைவராக அப்ரிடி மீண்டும் தெரிவு

afridi– MJ

லாஹூர்: பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், நம்பிக்கை நட்சத்திரமுமான சஹீட் அப்ரிடி, இருபது20 அணிக்கு மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எதிரவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது20 போட்டியில் இருந்து, இந்தியாவில் இடம்பெறும் 2016 உலக இருபது தொடர்வரை அணித்தலைவராக இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்திருக்கிறது.

கடந்த 2009 உலகக் கிண்ண இருபது20 போட்டியை தனது தலைமையில் அப்ரிடி வென்றெடுத்தார். அதன் பின்னர், முகம்மது ஹபீஸ் நியமிக்கப்பட்டார். பங்களாதேஷில் இடம்பெற்ற 2014 உலகக் கிண்ண தொடரின் பின்னர் பாகிஸ்தானின் அதிர்ச்சித் தோல்வியின் பின்னர் ஹபீஸ் தலைமைப் பதவியிலிருந்து வெளியேறினார்.

வீரர்கள் நெருக்டிக்குள்ளாகியிருக்கும் நிலையில் அப்ரிடி மீண்டும் பாகிஸ்தான் இருபது 20 அணிக்கு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

afridi

Published by

Leave a comment