மிக மோசமான கப்பல் விபத்து 500 பேர் பலியாகி இருக்கலாம்!
– MJ
ரோம்: ஆபிரிக்கா நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் குடியேற நுழைந்த பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியதால் கப்பலில் இருந்த 500 பேரும் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்திருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்தது. ஆபிரிக்கா நாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்குள் குடியேறுவதற்காக அவ்வப்போது இவ்வாறான கடற்பயணங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு இடம்பெற்ற பயணங்களில் அதிகமானவை அண்மைக்காலமாக கடலில் மூழ்கியிருந்தன.
கப்பலின் ஸ்திரத்தன்மை உகந்ததாக இருக்கவில்லை எனவும், அளவுக்கு அதிகமானவர்கள் ஏறிக்கொண்டதும் இவ்விபத்துக்கு காரணம் என ஐ.ஓ.எம். தெரிவிக்கிறது. இப்பயணத்தில் எகிப்து, பலஸ்தீன், லிப்யா, நைஜீரியா, சிரியா மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் ஐ.ஓ.எம். தெரிவிக்கின்றது.
Leave a comment