பாலியல் வல்லுறவும், தண்டணையும்

child-abuse2[1]– அப்துல் அஸீஸ், மனித உரிமைகள் புலனாய்வு அதிகாரி

ஒரு சமுகத்தில் சட்டமானது அமைதியையும் ஒழுங்கையும், நிலைநாட்டி அச்சமுகத்தின் பாதுகாப்பினையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது.

சமுகத்தில் சிறுவர்கள் வலுவிழந்தவர்களாக காணப்படுவதனாலும் அவர்கள் அச்சமுகத்தின் உயிரோட்டமானவர்கள் எனக் கருதப்படுவதனாலும் அவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது.

அண்மைக் காலமாக சிறுவர்களுக்கு புரியப்படுகின்ற பாலியல் இம்சைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் அதிகரித்து வருகின்றது. அது மட்டுமன்றி இந்த கொடுரச் செயலினை செய்பவர்கள் கொலை செய்கின்ற அளவுக்கு மிருகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிகழ்வின் போது பின்வரும் குற்றங்களை அடையாளப்படுத்த முடியும்.

1. தடுத்து வைத்தல் அல்லது கடத்தி வைத்தல்
2. பாலியல் இம்சைகளைச் செய்தல்
3. கடுங்காயம் ஏற்படுத்தல்
4. கொலை செய்தல்

எண்பிக்கப்படும் ஆதாரங்கள்

• இம்சைக்குள்ளானவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் காண்பித்தல்
• தடயங்களை அல்லது இருக்கின்ற ஆதாரங்களைப் பெறல்
• வாய்மூலமான சாட்சிகளைப் பெறல்
• சந்தேக நபரை அல்லது நபர்களைக் கைது செய்தல்
• நீதிமன்றத்தில் சந்தேக நபரை காண்பித்து தடுப்பு காவல் உத்தரவினைப் பெறல்
• சந்தேக நபரை மரபனு பரிசோதனை செய்தல்
• சந்தேக நபரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறல்
• நீதிமன்றம் மூலம் விசாரணைக்குட்படுத்தல்

child abuse

தண்டனைச் சட்டக் கோவை (Penal Code)

தண்டனைச் சட்டக் கோவையின் 75 மற்றும் 76 ஆம் பிரிவுகளின் பிரகாரம் 8 வயதிற்குக் குறைந்த பிள்ளைகளினால் புரியப்படும் எந்தவொரு செயல் அல்லது போதியளவு வளர்ச்சியடைந்த புத்தியற்ற 12 வயதுக்குக் குறைவான ஒரு பிள்ளையினால் ஏதாவது ஒரு செயல் சட்டத்தின் பிரகாரம் ஒரு குற்றம் எனக் கருதப்படலாகாது.

1995ம் ஆண்டின் 22ம் இலக்க மற்றும் 1998ம் ஆண்டின் 29ம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தக் கோவையின் பிரிவு 363

• பலவந்தம் அல்லது அச்சுறுத்தல் அல்லது மிரட்டல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அல்லது
• மரண அச்சத்திற்கு உள்ளாக்கி அல்லது காயமேற்படுத்தி அல்லது
• சட்ட விரோதமாக தடுத்து வைத்தலின் போது பெறப்பட்ட ஒப்புதலுடன் பாலியல் பலாத்காரம் புரிதல் குற்றமாகும்.

1998ம் ஆண்டின் 27ம் இலக்கம் கொண்ட நீதிமன்ற ஒழுங்கமைப்பு திருத்தச் சட்டம்

இந்த சட்டதின்படி 18 வயதுக்குறைந்த ஒரு யுவதியைக் கற்பழித்தல் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளில் அதாவது சிறுவர்களுக்கு துன்பம் விளைவித்தல் போன்ற வழக்குகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் துன்பத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தன்னுடைய சாட்சியத்தை சமர்ப்பிப்பதற்கும் கஸ்டமான அனுபவங்களைக் குறைப்பதற்கும் இயலுமாக இருக்கின்றது.

1998ம் ஆண்டின் 28ம் இலக்கம் கொண்ட குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவை திருத்தச் சட்டம்

இந்த சட்டத்தின் மூலம் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிக அதிகாரங்கள் கையளி;க்கப்படடுள்ளது. குற்றவியல் நடவடிக்கை முறைக் கோவையின் பிரகாரம் பிடியாணை இன்றி விளக்கமறியலில் வைப்பதற்கு உள்ளாகும் நபரொருவரை தடுத்து வைத்திருக்கும் ஆகக் கூடிய கால எல்லை 48 மணி;த்தியாலங்கள் ஆகும். அதற்குப் பின்னர் நீதிமன்ற கட்டளைப்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்க முடியும்.

குற்றம் சாட்டப்படும் ஒரு சந்தேக நபர் நீதிமன்றத்தில் அவரது குற்றம் நிருபிக்கப்படும் வரை அவர் சந்தேக நபராகவே கருதப்படுவார். இதனால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் அவருக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.

தண்டனை

பாரதூரமான பாலியல் இம்சை புரிந்தால் அவருக்கு 05 வருடங்களுக்கு குறையாத 20 வருடங்களுக்கு மேற்படாத கடுழியச் சிறைச் தண்டனையும் குற்றப்பணமும் செலுத்தும்படி தண்டித்தல் வேண்டும். குற்றம் இழைக்கப்பட்டவருக்கு நேர்ந்த தீங்கிற்காக அவ்வாளுக்கு நீதிமன்றம் தீர்மானிக்கும் தொகையை நட்டஈடாகக் கொடுப்பனவு செய்யும்படி கட்டளையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

Published by

Leave a comment