இஸிஸ் அமைப்பை எதிர்க்க 30 நாடுகள் தயார்!

france– MJ

லண்டன்: சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் குறிப்பிட்ட பிரதேசங்களை இணைத்து இஸ்லாமிய தேசமாக அறிவித்து உள்ளுர் அரசாங்கப் படைகளுடன் போராடிவரும் இஸிஸ் அமைப்பை எதிர்ப்பதற்கு 30 நாடுகள் தங்களது சம்மதங்களை அளித்திருப்பதாக நேற்றைய பரிஸ் மாநாடு தெரிவிக்கிறது.

இஸ்லாமிய தேசத்துக்கு எதிரான யுத்தத்தை மேற்கொள்வதற்கான மாநாடு நேற்று திங்கட்கிழமை பிரான்ஸின் தலைநகர் பரிஸில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா உட்பட அரபுவலயப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, இஸிஸ் அமைப்புக்கு எதிரான யுத்த்திற்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக சம்மதம் தெரிவித்தனர்.

இஸிஸ் அமைப்பில் 21,000-31,000வரையான போராளிகள் இருப்பதாக இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது இராணுவத் தளபாடங்களை சிரியாவுக்கும், ஈராக்கிற்கும் அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், இவ்வமைப்புக்களின் இராணுவத்தினரும் இப்போரில் கலந்துகொள்வர் எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கத்தய நாடுகளின் இத்தீர்மானத்திற்கு இஸிஸ் எந்த பதிலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

france

Published by

Leave a comment