காத்தான்குடி: அண்மையில் மட்டக்களப்பு மஞ்சந்தெடுவாய் பகுதியில் இடம்பெற்ற சஹாப்தீன் பாத்திமா சீமாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக காத்தான்குடி பகுதியில் ஒருவித அச்ச நிலை தோண்றியுள்ளது.
சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் வெளியில் தனிமையில் செல்வதற்கு அஞ்சுகின்றமையை காணக்கூடியதாகவுள்ளதுடன் இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்க பல்வேறு விழிப்பூட்டும் நடவடிக்கைகள் காத்தான்குடி பகுதியில் இடம்பெறுகின்றன.
இதற்கமைவாக இன்று காத்தான்குடி 165ஏ பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் கிராம சேவை அதிகாரி இணைந்து இப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சமூக சீர்கேடுகள் இடம்பெறும் செயற்பாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது இதனால் ஏற்படும் தாக்கங்கள் சிறு பிள்ளைகளை கடைத்தெருக்கள்; வீதிகள் பிரத்தியேக வகுப்புக்கள் இரவு நேர குர்ஆன் மத்ரசாக்கள் இது தவிர உறவினர்கள் அயலவர்களுடன் பிள்ளைகளை தனியே விட்டுச்செல்லல் தொடர்பாகவும் போன் பாவனை போதை வஸ்த்துக்கு இளைஞர்கள் அடிபணிந்துள்ளமை விடயமாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இவ்pடயத்தில் மிக உன்னிப்பாக பிள்ளைகளை கவனிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேற்படி நிகழ்வுக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி திரு சில்வா பொலிஸ் அதிகாரிகளான ஐனாப் முஐhஹித் திருமதி விமலதேவி கிராம சேவை அதிகாரி எச் எம் அஸ்ஹர் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் பணிப்பாளரும் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவருமான எம் ஹாரிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டதோடு கருத்துக்களையும் தெரிவித்தனர்.
எதிர்வரும் 19ம் திகதி கூடுதலான மக்களை அழைத்து இப்பகுதியில் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றினை நடாத்துவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
Published by




Leave a reply to King Ameer Cancel reply