கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370 இந்திய பெருங்கடலில் விழுந்த இடத்தில் 58 பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 மாயமானது.
பின்னர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும் அதில் இருந்த 239 பேரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
விமானம் விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் அவுஸ்திரேலியா தலைமையிலான குழு மாதக்கணக்கில் விமான பாகங்களை தேடி வருகின்றது. 6 மாதங்களாக தேடியும் விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்காததால் விமானம் அங்கு தான் விழுந்ததா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடி வரும் குழு 58 பொருட்களை கடலுக்கு அடியில் கண்டுபிடித்துள்ளது. அந்த பொருட்களை எடுக்கும் முயற்சியில் ஆய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் கிடந்த பொருட்கள் விமானத்தின் பாகங்களா அல்லது பாறைகளா என்பதை அவற்றை ஆய்வு செய்த பிறகே கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மாயமான புதிதில் கடலில் பல பொருட்கள் மிதந்ததை ஆய்வு குழு கண்டெடுத்தது. ஆனால் அவை மீனவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் என்பது தெரிய வந்தது.
Published by

Leave a comment