பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலீஸார் சங்கம் அமைத்து போராட முடிவு

police– அபூஹக்

கொழும்பு: அநீதியான முறையில் பொலீஸிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவோர் ஒன்றிணைந்து அந்த பதவி நீக்கத் தீர்மானங்களுக்கு எதிராக தமது உரிமைகளுக்காக போராடுவதற்காக சங்கமொன்றை அமைத்துள்ளனர்.

கடந்த பல மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மிகச் சிறிய தவறுகள் மற்றும் வேறு நபர்களால் புரியப்பட்ட தவறுகளுக்காக தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகமானோர் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

(லங்காதீப)

Published by

Leave a comment