காத்தான்குடி: திவிநெகும சஹன அருன தேசிய கடன் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகள் 16 பேருக்கு 5000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரையிலான கடன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 11-09-2014 நேற்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
வாழ்வின் எழுச்சி சமூதாய அபிவிருத்தி வங்கியின் புதிய காத்தான்குடி கிளை முகாமையாளர் ஏ. சுல்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக சவுதிஅரேபியா ,மாலைதீவு,எமன் , மலேசியா ஆகிய நாட்டின் பிரமுகர்கள்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகள் 16 பேருக்கு 50000 ரூபாய் திவிநெகும சஹன அருன கடன் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டது.
Published by



Leave a comment