காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் குவைட் சிட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை 9 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபருக்கு தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்து இன்று 12 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆர்ப்பாட்டம் காத்தான்குடி பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலிலிருந்து ஆரம்பமானது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் சட்டத்துறையே கொலை காரர்களை காப்பாற்றாதே, சட்டத்துறையே எதிரிக்கு துணை போகாதே,நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதி மன்றம் அநீதியாளர்களை அரவணைப்பதா,சட்டத்தரணிகளே கொலை காரர்களுக்கு ஆதரவாக உதவி செய்யாதீர்கள்,சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்து ,சிறுவர் துஷ்பிரயோக அதிகாரிகளே எங்கள் விடயத்தில் அக்கறை செலுத்துங்கள்,நீதித்துறையே இவ்வாறானவர்களுக்கு கருணை காட்டாதே போன்ற பல்வேறு தமிழ் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தண்டனை வழங்குமாறு கோரி சிறுமியின் தந்தை மற்றும் பொது மக்களினால் மஹஜர் காத்தான்குடி பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தால் காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரமளிக்கப்பட்ட நிருவாக உத்தியோத்தர் எஸ்.சுந்தரராஜாவிடம் கையளிக்கப்பட்டது.
இம் மஹஜரின் பிரதி பொலிஸ் உயரதிகாரிகள் ,முஸ்லிம் அமைச்சர்கள் ஆகியோருக்கு அனுப்பபடவுள்ளதாக குறித்த சிறுமியின் குடும்பத்தினர்கள் தெரிவித்தனர்.
கண்டனப் பேரணி இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸார் மற்றும் இரானுவத்தினர்கள் பாதுகாப்பு கடமையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்கள்,சிறுவர்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயளிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment