காத்தான்குடி: ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணம் தழுவியதான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் ஒன்றினை காத்தான்குடி மீடியா போரம் நடாத்தவுள்ளதாக மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.
மூன்றுதசாப்த கால யுத்தத்தின் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஓரே இடத்தில் ஓன்று சேர்வதோடு மூத்த ஊடகவியலாளர்கள் இளம் ஊடகவியலாளர்களுக்கு தமது கடந்தகால ஊடகத்துறை தொடர்பான அனுபவங்களை இதன்போது பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதுடன், ஊடகவியலாளர்கள் மத்தியில் காணப்படும் கலை, கலாசார, பண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன.
ஒக்டோபர் 7ம் திகதி இரவு காத்தான்குடி கடற்கரையில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெறவுள்ள இவ் ஒன்றுகூடலில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மாவட்டங்களைச் சேர்ந்த 150ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகம் அவர் தெரிவித்தார்.
Published by

Leave a comment