மட்டக்களப்பு: கிழக்கு மாகாண சபையினால் 2013 ஆண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான நடாத்தப்பட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்று 2013 அதி விஷேட விருதைப் பெற்ற மட்டக்களப்பு மாநகர சபையினை பாராட்டும் முகமாக நேற்று 10-09-2014 புதன்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்-முஸ்லிம் வர்த்தகர்கள்,மதப்பெரியார்கள், மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரிகள் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம்,மட்டு மாநகர வரியிறுப்பாளர் சங்கம்,மட்டு வர்த்தக சங்கம்,மட்டு மாவட்ட கைத்தொழில் வர்த்தக சம்மேளனம், மட்டு மாவட்ட வர்த்தக சம்மேளனம்,மட்டு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பு போன்ற அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்ததோடு அதன் பிரதிநிதிகளும் இவ் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
Published by





Leave a comment