மட்டக்களப்பு லேக் வீதி கரையோரப்பகுதி மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு

batticaloa– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஸ்ரீலங்கா சிறைக்கைதிகள் நலன்புரி சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சிறைக்கைதிகள் திணைக்களத்தின் கூட்டு முயற்சியின் பயனாக ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே அவர்களுக்கு உதவியளிப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் சிறைக்கைதிகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு சிறைச்சாலை ஏற்பாடு செய்த மனித நேயம் பேணும் சிரமதான நிகழ்வு 10-09-2014 புதன்கிழமை மட்டக்களப்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையிலுள்ள மட்டக்களப்பு லேக் வீதி கரையோரப்பகுதியில் இடம்பெற்றது.

batticaloa

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.பி.பிரியங்கர தலைமையில் இடம்பெற்ற மனித நேயம் பேணும் சிரமதான நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான அதிகாரி ஆர்.மோகனராஜா, சிறைச்சாலையின் அதிகாரி அருள் வண்ணன் ,சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர் எல்.ஜெய சுதாகரன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள், சிறைக்கைதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

batticaloa

இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலையின் சுமார் 15 கைதிகளினால் மட்டக்களப்பு லேக் வீதி கரையோரப்பகுதி மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

???????????????????????????????

Published by

Leave a comment