நான் ஓர் ஏழை என்பதால்… பரிதாபமாக சிதைக்கப்பட்டு வாய்க்குள் மண் அடைக்கப்பட்டு வாய்விட்டு உம்மா என்று அழைக்க முடியாமல் உங்களை விட்டு விடைபெறுகிறேன்.
நான் ஓர் ஏழை என்பதால்… என் வீடு ஏழைகளால் நிறைந்திருந்தது அதனால் ஏழைகளின் உள்ளங்களில் கண்ணீர்த்துளிகளும் தேங்கி நின்றன.
நான் ஓர் ஏழை என்பதால்… என்வீட்டில் உள்ளுர் அரசியல்வாதிகள் எவரது வருகையுமின்றி அமைதியாய் இருந்தது. அறிக்கைகள் விடும் கட்சிகளும், உலமா சபையும், சம்மேளனமும் அனுதாபம் தெரிவிக்க மறந்துவிட்டனர். என்னைச் ச்..சீழரித்துக் கொன்றவனைக் கண்டிக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.
நான் ஓர் ஏழை என்பதால்…. இப்பொழுது இங்கு தேர்தல் இல்லை தானே அதனால்தான் யாரும் வரவில்லை தேர்தல் சீசனென்றால் மாடி வீடு கட்டித் தருகிறோம் என்றும் கூறியிருப்பர்.
நான் ஓர் ஏழை என்பதால்… எவளோ ஒருத்தி செத்துவிட்டாள் என்றும் சிலர் நினைக்கலாம் எனது வடுக்கலும் மரணமும் என்னை ஒத்த சகோதரிகளுக்கு செய்தியாய் கூறிச்செல்லட்டும்.
எனக்காக சிந்திய கண்ணீர்களும்
உங்கள் பிரார்த்தணைகளுமே
எனக்கு என்றும் துணை!
பாத்திமா சீமா ஸஹாப்தீன் (9)
கடந்த 10-09-2014 அன்று காத்தான்குடி-1, மஞ்சந்தொடுவாய் குவைட் சிட்டி வீட்டுத்திட்டத்தில் வைத்து அநியாயமாகக் கொல்லப்பட்ட 9 வயது சிறுமி, மாணவி பாத்திமா சீமா ஸஹாப்தீன் என்பவளுக்காக இக்கவிதை பிரசுரிக்கப்படுகிறது.
Leave a comment