காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில் புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 100 வறிய குடும்பங்களுக்கு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் இணைப்பு பெறுவதற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வும் , குர் ஆன் மத்ரசா 300 மாணவ மாணவிகளுக்கு 30 ஜூஸ் குர் ஆன் வழங்கும் நிகழ்வும் 11-09-2014 இன்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக சவுதிஅரேபியா ,மாலைதீவு,எமன் , மலேசியா ஆகிய நாட்டின் பிரமுகர்கள்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு விஷேட உரையை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹி அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி) நிகழ்த்தினார்.
இதன் போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளினால் புதிய காத்தான்குடி 167 சி கிராம சேவகர் பிரிவிலுள்ள 100 வறிய சமுர்த்தி பயனாளிகளுக்கு குடி நீர் இணைப்பு பெறுவதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டதுடன் குர் ஆன் மத்ரசா 300 மாணவ மாணவிகளுக்கு 30 ஜூஸ் குர் ஆனும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சவுதிஅரேபியா ,மாலைதீவு,எமன்,மலேசியா ஆகிய நாட்டு பிரமுகர்கள் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் ,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின், ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர்களான பாரூக்,குறைஷ்,கரீம், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர், ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை,அஸ்ஸஹ்றா பாலர் பாடசாலை,ஹிஸ்புல்லாஹ் ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலை ஆகியவற்றின் நிர்வாகத்தினர்கள்,உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment