காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,காணி,காணி அபிவிருத்தி ,போக்குவரத்து அமைச்சின்
பாடசாலை கல்வி முறைமையை அறிவுசார் சமூகத்தின் அடிப்படையாக மாற்றும் திட்டத்தின் கீழ் 65 இலட்சம் ரூபாய் செலவில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலத்தில் புதிய இரண்டு மாடி வகுப்றைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 11-09-2014 இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
காத்தான்குடி-5 ஜாமியுழ்ழாபிரீன் வித்தியால அதிபர் ஏ.எல்.எம்.பாறூக் தலைமையில் இடம்பெற்ற இவ் அடிக்கல் நடும் நிகழ்வில், பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகமும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி பதுறுத்தீன்,பாடசாலைகளின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் புதிய இரண்டு மாடி வகுப்றைக் கட்டிடம் அமைப்பதற்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
Published by




Leave a comment