அல் குர்ஆன் மனன போட்டி பலரது வேண்டுகோள்களுக்கிணங்க ஐந்து நாட்கள் பிற்போடப்பட்டது

almanar– அல் – மனார்

காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தினால் இடம்பெறவிருந்த அல் குர்ஆன் மனன போட்டி பலரது வேண்டுகோள்களுக்கிணங்க ஐந்து நாட்கள் பிற்போடப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

விண்ணப்பங்கள் முடிவடையும் திகதியிலிருந்து ஏறக்குறைய இரு வாரங்கள் கூட தயார்படுத்துமளவுக்கு கால எல்லை வழங்கப்படவில்லை என்ற விண்ணப்பதாரிகளது ஆதங்கங்களை கருத்திற்கொண்டு 13.09.2013 ஆம் திகதி நடாத்தப்படவிருந்த போட்டியினை எதிர்வரும் 17.09.2014 புதன்கிழமை பிற்போட்டிருப்பதாகவும் மும்தாஸ் மதனி குறிப்பிட்டார்.

ஏற்கனவே விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதற்கமைய கிரமமாக 17, 18, 20 ஆகிய திகதிகளில் காலை 07:30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதுடன். இதுவிடயமாக ஏதும் மேலதிக தகவல்கள் பெறவிரும்பின் 071 8530151 அல்லது 071 8080156 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் கோரப்படுகின்றது.

Published by

Leave a comment