அதிக நாட்கள் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களை பாராட்டி நகரபிதாவினால் பரிசு வழங்கிவைப்பு

m.s.02– ரைஸ்

கிண்ணியா: ‘கல்வியின் முக்கியத்துவம் புரிந்த எம்மால் என்றைக்கும் வெறுமனே இருந்து விட முடியாது. இஸ்லாம் கூட கல்வி கற்கும் விடயத்தில் அதை அதிகளவு முக்கியத்துவப்படுத்தி இருக்கின்றது. கல்வியை தேடித்தேடி கற்க வேண்டிய அவசியத்தை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்’ என இன்று நாச்சிக்குடா தி. அல் மதீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

அல் மதீனா வித்தியாலய அதிபர் எஸ். லாபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு பாடசாலைக்கு அதிக நாட்கள் வருகை தந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.

m.s.02

5 ஆம் ஆண்டுவரையிலான மாணவர்களை கொண்ட அல் மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் அபிவிருத்தி சங்க குழுவினருடனான கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

m.s.03

m.s.04

Published by

Leave a comment