சுவர் சரிந்ததில் ஐந்து தொழிலாளர் பலி: மக்காவில் சம்பவம்
– MJ
மக்கா: புனித நகரமான மக்காவில் ‘ஜபல் கஃபா’ புரஜக்ட்டில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது குறித்த கட்டடத்தின் 15 மீற்றர் உயரமான சுவர் சரிந்து விழுந்ததில் குறைந்தது 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக மக்கா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
‘ஜபல் கஃபா’ புரஜக்ட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது வேறு தொழிலாளர்கள் உபயோகித்த பாரமான கருவிகளால் இச்சுவர் சரிந்து வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் 20 தொழிலாளர்கள் சிக்குண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புனித ஆலயத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்த ‘ஜபல் கஃபா’ திட்டம் ஹஜ் யாத்திரிகர்களின் மேலதிக இடவசதிக்காக தற்பொழுது இடம்பெற்றுவரும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. பலியானவர்களின் சுயவிபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment