எந்நேரத்திலும் 1.46 மணி என்று பிழையான நேரத்தைக் காட்டும் ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுரம்!

oddamavadi– பழுலுல்லாஹ் பர்ஹான்

ஒட்டமாவடி: ஸ்பெய்ன் நாட்டு அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு –ஒட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் வாழைச்சேனை தியாயவெட்டுவான் கொழும்பு பிரதான வீதியில் அல்-மஸ்ஜிதுல் ஹூசைனியா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னாலுள்ள ஒட்டமாவடி மணிக்கூட்டுக் போபுரம் கடந்த பல மாதங்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் எந்த நேரத்திலும் 1.46 மணி நேரம் என்று பிழையாக நேரம் காட்டுவதாகவும் அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று ஒட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த மணிக்கூட்டுக் போபுரம் செயலிழந்து காணப்படுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமேன பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் 2010 ஏப்ரல் மாதம் 2ம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட இம் மணிக்கூட்டுக் போபுரத்துக்கு ஸ்பெய்ன் நாட்டு அரசு நிதி உதவி வழங்கியிருந்தது.

oddamavadi

குறித்த வீதியால் கொழும்பு,பொலன்னறுவை, பாணந்துறை,பதுளை,யாழப்பாணம்,வவுனியா,புத்தளம்,கண்டி ,கல்முனை,அக்கறைப்பற்று,மூதூர்,திருகோணாமலை, அம்பாறை,பொத்துவில்,ஏறாவூர்,வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய தூர இடங்களுக்கு செல்லும்; பஸ்கள் வருவதால் சரியான நேரத்தை காட்டத்தவரும் இக் கடிகாரம் பிரயாணிகளினதும்,அப் பகுதி மக்களினதும் நன்மைகருதி உடனடியாக செயற்படுவதற்கு சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

oddamavady

Published by

Leave a comment