பதுளை: எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் தனது பிரச்சார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் ஒரு அங்கமாக “நகர்வு” என்ற பத்திரிகை ஒன்றினையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வீடுவீடாக விநியோகம் செய்து வருகின்றது.
மேற்படி பத்திரிகையில் நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பில் மக்களை வழிநடாத்தும் முறையான வழிகாட்டல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஊவா மாகாணத்தின் பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதேசங்களில் பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்புக்கள் போன்ற வாக்காளப் பெருமக்களை விழிப்பூட்டும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
மேற்படி பிரச்சார நடவடிக்கைகளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் MR.நஜா முஹம்மத் உள்ளிட்ட பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Published by




Leave a reply to mohmedrislaam Cancel reply