‘இஸ்லாமிய தேச போராளிகளை முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும்’ – சவுதி சிரேஷ்ட முஃப்தி

aziz mufthi saudi– MJ

றியாத்: ‘இஸ்லாமிய தேசத்தின் போராளிகளான இஸிஸ் அமைப்பை உலக முஸ்லிம்கள் எதிர்க்கவேண்டும்’ என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முஃப்தியான அப்துல் அஸீஸ் அஷ் ஷெய்ஹ் வேண்டுகோளை விடுத்துள்ளோர்.

‘முஸ்லிம்கள் மீது போராட்டங்களை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்து, பின்னர் அங்குள்ள முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் ஜிஹாத் என்ற பெயரிலான இந்த இஸிஸ் தீவிரவாதத்தை முஸ்லிம்கள் ஒழிக்கவேண்டும் எனவும், இவ்வியக்கத்துக்கு எதிராக அணிதிரள வேண்டும் எனவும் சிரேஷ்ட முஃப்தி அப்துல் அஸீஸ் அவசர வேண்டுகோளை உலக முஸ்லிம்களுக்கு விடுத்துள்ளார்’.

முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்துவந்த முஸ்லிம்களுக்குரிய நிலங்களை சிரியாவிலும், ஈராக்கிலும் தனது தீவிரவாதத்தால் அபகரித்து, இன்று ‘இஸ்லாமிய தேசம்’ என பிரகடணப்படுத்தி ஆட்சி அதிகாரங்களை அங்கு நிலைநாட்டி வருகின்றனர்’.

aziz mufthi saudi
அப்துல் அஸீஸ் அஷ் ஷெய்ஹ்

‘இஸிஸ் ஒர் பயங்கரவாத இயக்கம். தனக்கு பிடிக்காதவர்களையும், பிடிக்காத இடங்களையும் அழித்து வருகின்றது. இஸிஸ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்தும் போர் தொடுக்குமாயின் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்’ எனவும் முஃப்தி அப்துல் அஸீஸ் எச்சரித்துள்ளார்.

Published by

Leave a comment