‘திருமண பிணக்குகளை இணையத்தில் இடாதீர்கள்’ -சவுதி முஃப்தி

aziz mufthi saudi– MJ

றியாத்: ‘திருமணம், மனிதர்களுக்கு அல்லாஹ்வால் ஆணையிடப்பட்ட விடயம். இஸ்லாத்தில் திருமணம் ஓர் முக்கிய பகுதி. எனவே கணவன்-மனைவிகளுக்கிடையில் எழும் இல்லற பிணக்குகளை இணையத்தில் இடவேண்டாம்’ என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முஃப்தி அப்துல் அஸீஸ் அஷ்-ஷெய்ஹ் சவுதி மக்களைக் கேட்டிருக்கின்றார்.

‘திருமணம் என்பது இஸ்லாத்தில் புனிதமான ஓர் செயல். இஸ்லாம் திருமணத்தையும் குடும்ப வாழ்க்கையையும் வரவேற்கிறது. அதற்கு கண்ணியமும் கொடுக்கிறது. பெண்களுக்கான உரிமைகளை தாராளமாக இஸ்லாம் வழங்கி இருக்கிறது’.

aziz mufthi saudi
சிரேஷ்ட முஃப்தி அப்துல் அஸீஸ் அஷ்-ஷெய்ஹ்

‘இந்நிலையில் கணவன் மணைவிக்கிடையில் ஏற்படும் பிணக்குகளையும், கருத்து முரண்பாடுகளையும் இணையத்தில் தெரிவித்து நண்பர்களிடம் ஆலோசனை கேட்கின்றனர். இது புனிதமான இல்லற வாழ்க்கையை சீரழிக்கும் விடயமாகும். கனவன்-மனைவிக்கிடையில் பிரச்சினைகள் வரும்போது அதற்காக நீதிமன்றம் செயல்படுகிறது’.

‘இஸ்லாம் அனுமதித்த விடயத்தை நாடாமல், கனவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்துவது இஸ்லாத்து விரோதமான செயல். அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்’ எனவும், ‘அந்தரங்கப் பிரச்சினைகளை இணையத்தில்விட்டு, உங்கள் குடும்பத்தில் பிறர் கவனம் செலுத்தும் நிலைக்கும் இடமளிக்காதீர்கள்’ எனவும் முஃப்தி அப்துல் அஸீஸ் மக்களைக் கேட்டிருக்கின்றார்.

Published by

Leave a comment