-டீன்பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்தின் 10 வது ஆண்டு புா்த்தியினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் (07.09.2014 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தினில் நடை பெற்றது. பிரதம அதிதியாக பொளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா MA/MP கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் Eng ,காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் JP.முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் JP, காத்தான்குடி நகர சபை செயலாளர் திரு j. சர்வேஸ்வரன் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளின் தொடர் வர்ணனையாளர்களாக பிரபல அறிவிப்பாளர் ஏ.எல்.அம்ஜத் மற்றும் எம்.கலிபதுல்லா ஆகியோர் கடமையாற்றினர்
இன்றைய இறுதிப் போட்டியில் காத்தான்குடி ஹூசைனியா மற்றும் காத்தான்குடி அக்ரம்ஸ் விளையாட்டுக் கழகங்கள் மோதின இதில் காத்தான்குடி அக்ரம்ஸ் வி.கழகம் 68 ஓட்டங்களைப் பெற்று சம்பியனாக தெரிவாகின.
இன்றை போட்டியின் போது பல தெரிவுகள் இடம் பெற்று ஆட்ட வீரா்களுக்கான பதக்கங்கள், வெற்றிக்கின்னங்கள் வழங்கப்பட்டன.








Leave a comment