இலங்கையில் கைவிரல் அடையாளத்துடன்கூடிய புதிய கடவுச்சீட்டு

passport_sl– SHM

கொழும்பு: இலங்கை கடவுச்சீட்டுக்களில் கடவுச் சீட்டுக்குரியவரின் 10 கைவிரல் அடையாளங்களும் பொறிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் குடிவரவு குடியகல்வு சட்டம் திருத்தப்படவுள்ளது.

இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.இந்நிலையில் அமைச்சரவையின் தீர்மானம், அமைச்சரவை உபகுழுவின் சட்ட ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டுக்களுக்கு 10 கைவிரல் அடையாளங்களை பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறான கைவிரல் அடையாளத்துடன்கூடிய கடவுச்சீட்டுக்கள் மேலத்தேய மற்றும் கிழக்காசிய நாடுகளில் நடைமுறையில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment