சிரிய இராணுவத்திற்கும் இஸிஸ் அமைப்புக்குமிடையில் பலத்த சண்டை இடம்பெறுகிறது

syria– MJ

பெண்காஸி: சிரியாவின் பெண்காஸி நகரில் இன்று இஸ்லாமிய தேசப் போராளிகளுக்கும் சிரியாவின் உள்ளுர் இராணுவத்திற்குமிடையில் ஏற்பட்ட சண்டையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

சிரியாவில் இஸ்லாமிய தேசமாகப் பிரகடணப்படுத்தப்பட்டிருந்த பெண்காஸி நகரில் பேக்கரி ஒன்றை இஸிஸ் நடாத்தி வந்தது. இந்த பேக்கரியை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலில் இஸிஸ் அமைப்பினர் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இஸ்லாமியத் தேசத்துப் போராளிகள், பெண்காஸி விமான நிலையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மற்றுமொரு முயற்சி சிரியாவின் உள்ளுர் இராணுவத்தினரால் தற்பொழுது முறியடிக்கப்பட்டிருப்பதாக சிரியா தெரிவித்துள்ளது.

இருதரப்புக்குமிடையில் பலத்த சண்டை இடம்பெற்று வருவதாகவும் சிரிய ஊடகம் தெரிவிக்கின்றது.

syria
இருதரப்புக்குமிடையில் தற்பொழுது இடம்பெற்றுவரும் சண்டையில் தீப்பற்றும் வாகணம்

Published by

Leave a comment