காத்தான்குடி: அண்மையில் காத்தான்குடி அல்மநார் கல்லூரி அர்ராசித் மண்டபத்தில் கவிஞன் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு ‘ நூல் வெளியீட்டு விழாவில் காத்தான்குடி கவிஞர் இல்மி அஹமட் லெவ்வை அவர்களினால் அரங்கில் வாசிக்கப்பட்ட வாழ்த்துப் பா.
அன்பன் மதிக்கு அழகான கவியொன்று அரங்கில் சொல்ல ஆசையெனக்கு ! -0- அவனுக்கும் எனக்கும் ஓராத்மீக சினேகமுண்டு- ஓட்டாத, வானமும் பூமியும் ஒன்றை ஒன்று இரகசியமாக காதலிப்பதைப்போல ! -0- இக்காலத்தில் சாஸ்டாங்க கவிஞர்கள் முளைக்கின்ற போது -இவனோ சிம்மாசனங்களின் சில்லறைகளுக்கு விலைபோகாதவன் அதுதான் எனக்கும் அவனுக்குமுள்ள காதலின் இரகசியமும் கூட! -0- அன்பன் மஜீது..! பாட்டுக்கு வார்த்தை தேடி வைகுண்டம் சென்றுவருவான் வீட்டுக்கு வருவாய் நாடி வீதிக்கு வருவதும் கஸ்டமவனுக்கு ! ஆனாலும் -அவன் புல்லுக்காய் பல்லுக்காட்டாத புலி ! -0- பாவலர் தோப்புக்குள் பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை ஆனாலும் இவனொரு பழுத்த பலா.. -0- எச்சரிப்புக்கள் அச்சுறுத்தல்கள் என்று முக்காடுகளுக்குள் ஒழிந்து கொள்ளும் எழுத்தாழுகைகள் இருக்க இவனோ..! சியோனிச அரக்கர்களின் வெறியாட்டத்தால்
ஈமானிய உம்மாக்கள் குருதியால் குழிப்பாட்டப்பட்டபோதும், தர்ஹாடவுண் மக்கள்- துறவிகள் சிலரின் துன்புறுத்தலுக்கு தீனியானபோதும், எறிகணைச் சொற்களால் இணையங்களில் எறிந்தவன் துணிவோடு…! இவன்! அதனால்தான் சொல்கிறேன் உறைக்குள் உறங்காத வாள் என்று மதியை -0- மதி ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு’ –இது உன் கன்னி பிரசவம்! -0- நீ வாழவேண்டும் எழுத்துலகை ஆழவேண்டும் வல்லரசு வைரமுத்துவைப்போல, வாழ்ந்துபோன கண்ணதாசனைப் போல, ஏன் நம் கவிக்கோவைப் போல பாவலர் தோப்பின் பார்போற்றும் ஜாம்பவானாய் பிரகாசிக்க பிரார்த்திக்கிறேன். வாழ்க நீ வளர்க உன் கவித்துவம்! -0- அல்ஹம்துலில்லஹ் !
– கவிஞர் இல்மி அஹமட் லெவ்வை காத்தான்குடி
கவிஞர் மதியன்பனுடன் (வலம்) கவிஞர் இல்மி அகமட் லெவ்வை (இடம்)
Leave a comment