நானும் என் தலைவனும்

politics– கவிஞர் காத்தூரி

புழுத்துப் போன சிஸ்டத்திலே
உளுத்துப் போன தலைவனுக்கு
கழுத்தக் குடுத்து வாக்களித்து
அலுத்துப் போன வாக்காளன் நான்

வெளுத்துப்போன தலையோட இவன்
இழுத்துப் போன பாதையிலே
அழுத்தும் வேதனை பார்க்காம
கூட இருக்கும் தொண்டன் நான்

யோசிக்க சொல்லிக் கொடுக்காம
வாசிக்கு வாலாட்டும் தந்திரத்த
பே(B)சிக்கா சொல்லித் தந்து இவன்
காசிக்கு அடிமையாக்கிப் போட்டான்

உணர்ச்சிப் பிளம்பாப் பேசிப்பேசி
உரிமை கிரிமை என்று சொல்லி
ஈமான் சாமான் உசுப்பிவிட்டு
எல்லா வோட்டும் அள்ளிக்குவான்

ஏமாந்த சோணகிரி எங்கசனம்
ஏமாத்த ஏமாத்த அசராம ஏமாறும்
இன்னொரு சான்ஸ் இவனுக்கு
கொடுக்க எண்ணி ஏமாறும்

politics

பசிக்குச் சோத்து பார்சலும்
குசிக்கு கூத்து கும்மாளமும்
விசுக்கி விசுக்கி இவன் கொடுத்தா
உரிமை எங்கே உம்மா எங்கே?

பதவிக்காக அடிச்சிக்குவான்
ஒத்தும போல நடிச்சிக்குவான்
ஒட்டு மொத்தமா வோட்ட அள்ளி
மன்னன் காலடி கொட்டிடுவான்

கேக்குற எண்டா கேளுங்கப்பா
கிள்ளுக் கீரையா இருக்காதிங்க
கிடச்ச சான்ச பயன்படுத்தி
சொல்ல நினச்சத சொல்லிடுங்க.

Published by

Leave a comment