எம் பிரதேச யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை உள்ளூரிலேயே பெற்றுக்கொடுக்க நகரபிதா ஹில்மி நடவடிக்கை

F.DS 1– ரைஸ்

கிண்ணியா: வெளிநாடுகளுக்கு சென்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் எமது யுவதிகளுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்புக்களை எவ்வாறு பெற்றுக் கொடுக்கலாம்? என்ற கேள்விக்கு விடை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையினை எடுத்து அதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொடுக்க கிண்ணியா நகரசபை நகரபிதா ஹில்மி மஹ்ரூப் முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

கிண்ணியா, மூதூர், தோப்பூர், சீனக்குடா, வெள்ளை மணல், சேருவெல போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற எமது பெண்கள் வறுமையின் காரணமாகவும் சீதன கொடுமையினாலும் வெளிநாடுகளுக்கு சென்று பல வகையிலும் கஷ்டப்பட்டு துன்பப்பட்டு பல வகையிலும் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதை அன்றாடம் காணக்கூடியதாகவுள்ளது.

இதனை தடுக்கும் முகமாகவும், கஸ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற எண்ணத்திலும் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் அதற்கான செயலில் இறங்கியுள்ளார. இது தொடர்பாக நகரபிதாவிடம் கேட்டபோது,

F.DS 1

நான் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களிடம் எமது பிரதேசத்தல் ஆடை தொழிற்சாலையுடன் கூடிய கைத்தொழல் பேட்டை ஒன்றை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்ததிற்கிணங்க கிண்ணியா உப்பாறு பிரதேசத்தில் ஆடை தொழிற்சாலையுடன் கூடிய கைத்தொழல் பேட்டையினை அமைப்பதற்குரிய முன் மொழிவினை ஏற்படுத்தியதன் விளைவாக சென்ற மாதம் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளரும், கிண்ணியா பிரதேச செயலகத்தின் முன்னால் செயலாளருமான எம்.ஏ.தாஜூதீன் அவர்கள் இப்பிரதேசத்தை பார்வையிட்டதோடு ஆடைத் தொழிற்சாலையுடன் கூடிய கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கான இணக்கப்பாட்டினையும் வழங்கியிருந்தார். அத்தோடு இதனை அமைப்பதற்கா ஒத்துழைப்புக்களை மக்கள் எமக்கு வழங்கவேண்டும் வழங்குவார்கள் என்று நம்புகின்றேன்.

F.DS 2

இன்னும் இதனை அமைப்பதற்கான தலையீடுகள் இல்லாத விடத்து குறித்த வேலைத்திட்டத்தினை மிக விரைவாக என்னால் முன்னெடுக்க முடியும். காரணம் அண்மைக்காலமாக என்னால் எடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளும் தடைகளும் அதிகமாகவே வந்த வண்ணமுள்ளது என நகரபிதா தெரிவித்தார்.

இதற்கிணங்க நேற்று 03.09.2014 ஆம் திகதி பிரபல ஆடை தொழிற்சாலை முதலீட்டாளர் குருப் எச்.ஆர்.எம் கேர்ணல் சுஜித் ஜெயசேகர இதற்கான சாத்தியப்பாடுகளை அறிந்து கொள்ளும் பொருட்டு கிண்ணியா உப்பாறு பிரதேசத்திற்கு வருகை தந்திருந்ததோடு நகரசபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார். இதன்போது நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், கேர்ணல் சுஜித் ஜெயசேகர, எமது பிரதேச முக்கிய அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும், நகரசபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment