திரிபோலியில் 11 விமானங்கள் மாயம்: போராளிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

plane– AF-90

திரிபோலி: லிபியாவின் தலைநகர் திரிபோலி விமான நிலையத்தில் சமீபத்தில் 11 விமானங்கள் மாயமாகியுள்ளன. அவற்றை அங்குள்ள போராளிகள் கடத்தி தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

லிபியாவில் கடந்த 34 ஆண்டுகளாக கடாபியின் ஆட்சி இருந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளூர் போராட்டக்குழுக்களின் உதவியுடன் கடாபியின் ஆட்சியை மேற்குலகம் திட்டமிட்டு முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு தேசிய இடைக்கால பேரவை ஆட்சி நிறுவப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தேர்தல் நடந்தது. அதன்பிறகு அங்கு புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த மூன்றாண்டுகளாக லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள விமான நிலையம் ஜிண்டான் போராட்டக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

plane
கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதலில் திரிபோலி விமான நிலையத்தில் ஷெல் தாக்குதலில் சேதமாக்கப்பட்ட விமானம்

இந்த விமானநிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் மிஸ்ரதா இஸ்லாமிய போராட்டக் குழு கடந்த ஒரு மாத காலமாக ஜிண்டான் போராட்டக் குழுவுடன் சண்டையிட்டு வருகிறது.

இச்சண்டையில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். விமான நிலையமும் ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விமான நிலைய சொத்துகளும் சேதம் அடைந்தன.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டினை மிஸ்ரதா போராட்டக்குழு கைப்பற்றி விட்டதாக லிபியா தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த விமான நிலையத்திலிருந்த 11 பயணிகள் விமானங்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

மாயமான அந்த விமானங்களைக் கொண்டு போராளிகள், உலகில் எங்கேயாவது தாக்குதலைத் மேற்கொள்ளலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment