இஸ்லாமிய ஹிலாபத்: அமெரிக்காவின் மற்றுமொரு ஊடகவியளாளரும் கொல்லப்பட்டார்!

us isis– MJ

பக்தாத்: அமெரிக்காவின் மற்றுமொரு ஊடகவியலாளரான ஸ்டீவன் சொட்லொப் என்பவரை இஸிஸ் அமைப்பினர் கொலை செய்யும் காட்சி அடங்கிய ஒளிநாடா உண்மையானது என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, பணயக்கைதியாக சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் இரண்டாவது ஊடகவியலாளரும் தற்பொழுது கொல்லப்பட்டிருக்கிறார்.

கடந்த 2013 ம் ஆண்டு சிரியாவில் வைத்து காணாமல் போயிருந்த ஊடகவியலாளரான ஸ்டீவன் சொட்லப், பின்னர் இஸ்லாமிய ஹலீபத் இயக்கத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பது ஊர்ஜிதமானது.

இதனடிப்படையில் சிரியாவில் கைதான இரண்டு அமெரிக்க ஊடகவியலாளர்களும் அடுத்தடுத்து இஸிஸ் அமைப்பினால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

‘எனது மகனின் கொலைக்கு அப்துல்லாஹ் பக்தாதியே பொறுப்பானவர்’ என கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் தாய் கூறியுள்ளார்.

us isis
ஸ்டீவன் சொட்லொப்

Published by

Leave a comment