ஈமெயிலுக்கு வயது 32!

internet_keyboar-100008909-large[1]– AF-90

நியூயோர்க்: ஈமெயில் 32 வயதைத் தொட்டுள்ளது. 10 வயது பையன் முதல் 100 வயது தாத்தா வரை இன்று ஈமெயிலில் புழங்காத மனிதர்களே இல்லை என்ற இந்த இன்றைய நிலையை 32 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய காரணகர்த்தா ஒரு இந்தியத் தமிழர் – வி.ஏ. சிவா அய்யாத்துரை.

இவர்தான் முதன் முதலில் எலக்ட்ரோனிக் மெயில் எனப்படும் ஈமெயிலை உருவாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். முறைப்படி தனது கண்டுபிடிப்புக்கு கொப்பிரைட் அதாவது காப்புரிமையும் பெற்றவர்.

பள்ளிப் பருவத்திலேயே அய்யாத்துரை ஈமெயிலைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார். ஆனால் 1981 ம் ஆண்டு முதல்தான் இதை வெளியுலகுக்கு அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சிவா அய்யாத்துரை தமிழராக இருந்தபோதிலும், பல காலத்திற்கு முன்பே அமெரிக்காவில் போய் செட்டிலானவர். 1978ம் ஆண்டு அவர் மேல்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது ஈமெயிலை கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பித்தார்.

அவர் கண்டுபிடித்த மெயிலுக்கு வைத்த பெயர் இன்டர்ஒபீஸ் மெயில் சிஸ்டம். அதுதான் ஈமெயிலின் பிறப்பாக அமைந்தது.

email
சிவா அய்யாத்துரை

1981ம் ஆண்டு இந்த ஈமெயிலை வெளியுலகுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். இதற்காக அவருக்கு வெஸ்டிங்ஹவுஸ் அறிவியல் திறன் விருதும் கிடைத்தது. அதன் பின்னர் 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இந்த ஈமெயில் கண்டுபிடிப்பை அங்கீகரித்த அமெரிக்க அரசு அவருக்குப் பாராட்டும் தெரிவித்தது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள லிவிங்ஸ்டன் உயர் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் தனது சொந்த உபயோகத்திற்காக இந்த மின்னணு மெயில் முறையை உருவாக்கினார் அய்யாத்துரை. பின்னர் அதை நியூஜெர்சி, மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும் சொல்லிக் கொடுத்து அவர்களிடம் அதை ஒப்படைத்தார்.

email (2)

அய்யாத்துரை இமெயிலைக் கண்டுபிடித்த சமயத்தில் மென் பொருட்களை காப்புரிமை பெற சட்டத்தில் இடம் இல்லாத நிலை இருந்தது. வெறும் பேடன்ட் மட்டுமே அப்போது நடைமுறையில் இருந்தது.

ஈமெயிலை முதன் முதலில் உருவாக்கியவர் அய்யாத்துரைதான் என்றாலும் கூட மேலும் சிலர் தாங்கள்தான் ஈமெயிலை கண்டுபிடித்ததாக பின்னாளில் உரிமை கோரவே சர்ச்சைகளும் கிளம்பின.

இன்றைய ஈமெயில் காலத்தில் நாம் அனுப்பும் ஒவ்வொரு ஈமெயிலிலும் அய்யாத்துரையின் உழைப்பு அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment