இரவில் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறிய கித்ருவன் விதானகே மீது ஒழுக்காற்று விசாரணை
கொழும்பு: காலியில் நடந்த பாகிஸ்தானுடனான முதலா வது டெஸ்ட் போட்டியின்போது இரவு வேளையில் ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறிய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர் கித்ருவன் விதானகே ஒழுக்காற்று விசாரணைக்கு முகம் கொடுக்கவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் உறுதி செய்தது.
குறித்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரவு 7 மணிக்கு ஹோட்டல் அறையை விட்டு வெளியேறிய விதானகே அடுத்த நாள் காலை 6.30 மணி வரை திரும்பவில்லை என்று இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் மைக்கல் டி சொய்சாவின் மின்னஞ்சலை மேற்கோள்காட்டி செய்தி வெளி யாகியுள்ளது.
இந்த சம்பவம் ஒழுங்கு முறையை மீறும் செயல் என்று தீவிரமாக பார்க்கும் இலங்கை அணித்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் மற்றும் பயிற்சியாளர் மார்வன் அத்தபத்து விதான கேவை இரண்டாவது டெஸ்ட் போட்டி யில் இருந்து நீக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக சம்பவம் இடம் பெற்றதன் அடுத்த தினத்தில் விதானகே துடுப்பெடுத்தாடும் நிலை இருந்த போதே இவ்வாறு ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி இருப்பது அணித்தலைவர் மற்றும் பயிற் சியாளரின் கோபத்திற்கு காரண மாகும். எனினும் தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரியவின் உத்தரவுக்கு அமைய விதானகே அணியுடன் இணைந்திருக்க அனுமதிக் கப்பட்டுள்ளார்.
‘ஜனாதிபதி ஆலோசகர் பாலித்த குமாரசிங்க தலைமையிலான ஒழுக்காற்றுக் குழு மூலம் இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் விசாரணை நடத்தும்’ என்று இலங்கை கிரிக்கெட் நிறை வேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டார். இந்த விசாரணை நாளை செப்டெம்பர் 2ஆம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கித்ருவன் விதானகே
டெஸ்ட் போட்டிகளின்போது ஹோட்டல் அறையில் முறையான கட்டுப்பாடுகள் அல்லது உறங்கும் நேரம் குறித்து எந்த நிபந்தனையும் விதிக்காதபோதும் முகாமையாளருக்கு அறிவிக்காமல் பின் இரவு வரை ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி இருப்பது தெளிவாக ஒழுங்கு விதி முறையை மீறுவதாக அமையும். விதானகே இதற்கு முன்னரும் எந்த அறிவிப்பும் இன்றி ஹோட்டல் அறையை விட்டு வெளியேறிய சம்பவங்கள் பதி வாகியுள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து ஜயசூரிய எச்சரித்துமுள்ளார். இவ்வாறு இந்த ஆண்டு ஆரம் பத்தில் நடந்த பங்களாதேஷ் தொடர் மற்றும் பிரிட்டன் பயணத்தின்போதும் விதானகே ஒழுங்கு முறையை மீறியிருப்பதாக டி சொய்சா சுட்டிக் காட்டியுள்ளார்.
இதில் வீரர்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறும்போது ஏற்படும் ஆட்ட நிர்ணய சாத் தியங்கள் குறித்தும் டி சொய்சாவின் மின்னஞ்ச லில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒழுக் காற்று விசாரணையின் மூலம் அது குறித்து கண் டறியப்படும் பட்சத்தில் தேவைப்பட்டால் ஊழல் தடுப்பு நிர்வாகத்திற்கும் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாம் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறியதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கும் விதானகே குறித்த காலத்தில் பௌத்த தேவா லயத்தில் பிரித் சடங்கில் ஈடுபட்டதாக தெரிவித்திருப்பதாக டி சொய்சாவின் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a comment