ஆளும்கட்சிக் கூட்டத்தில் பெண் ஆதரவாளர்களுக்கும் மதுபானம் சப்ளை!

upfaகம்பஹா: கம்பஹா பியகம பாடசாலை மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. பௌர்ணமி தினத்தில் கம்பஹாவில் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் மக்களுக்கு இலவச பியர் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விரும்பியவாறு வரையறையின்றி பியர் குடித்து மகிழ ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கு செய்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்தர்கள் புனித நாளாக கருதும் நிக்கினி பௌர்ணமி தினமன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்கு, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். கூட்டம் நிறைவடைவதுடன் இந்த பியர் விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் பியர் வழங்கப்பட்டிருந்தது.

இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் போதையில் தள்ளாடியதாகவும்இ மது போதையில் வாகனங்களைச் செலுத்தியதாகவும் இதனைப் பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment