காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களைச் சேர்த்தல் – 2015

almanarஅல்மனார்

காத்தான்குடி:  கடந்த 8 வருடங்களாக அல்லாஹ்வின் உதவியோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எமது காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு எதிர்வரும் 2015ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

எமது கல்லூரி பாடசாலைக் கல்வியையும் ஷரீஆக் கல்வியையும் ஒரே கூரையின் கீழ் அதாவது எமது கல்லூரியிலேயே கற்பதற்கான முழுமையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்வரும் தகைமைகளைக் கொண்ட ஆண் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

1. அல் குர்ஆனை திருத்தமாக ஓதக் கூடியவராக இருத்தல்.

2.தற்போது தரம் 8இல் கல்வி கற்பவராக இருப்பதோடு 2015ல் தரம் 9இற்கு சித்தியடைந்தவராக இருத்தல்.

3. அனுமதி பெறும் போது 14 வயதுடையவராக இருத்தல்.

விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 01.09.2014 தொடக்கம் வெள்ளி தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை கல்லூரியின் வரவேற்புப் பகுதியில் ரூ.100.00 பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி

த. பெ. இல 13, கடற்கரை வீதி,

புதிய காத்தான்குடி

http://www.almanarkz.org

தொலைபேசி இலக்கங்கள்

0652245797, 0779232130, 0775259300

Published by

Leave a comment