– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
டோஹா: புத்தளம் நகரத்தின் அபிவிருத்தியின் மூலம் எமது வர்த்தக சமூகம் நன்மைய அடையும் எனற இலக்கினை மையப்படுத்தியே எனது பணிகள் இடம் பெறுவதாக தெரிவித்துள்ள புத்தளம் நகர சபை தலைவர் கமறுதீன் அப்துல் பாயிஸ் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்ற போது அரச சட்டதிட்டங்களுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு கட்டாருக்கு வருகைத்தந்திருந்த புத்தளம் நகர சபை தலைவர்இதொழில் நிமிர்த்தம் கட்டாரில் பணிபுரிந்து வரும் புத்தளம் சமூகத்தினரை நேற்று(2014-08-29) மாலை சந்தித்து புத்தளம் அன்று.இன்று.நாளை என்ற தலைப்பிலான திட்டம் தொடர்பில் விளக்கப்படுத்தும் போது மேற்கண்டவாறு கூறினார்.
கட்டார் அயின் கலீத் பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் புத்தளம் நகர சபை தலைவருடன் நகர உறுப்பினர் முஜாஹிதுல்லாவும இதன் போது பிரசன்னமாகியிருந்தார்.
இங்கு மேலும் புத்தளம் நகர சபை தலைவர் கருத்துரைக்கும் போது,இன்றைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பலவற்றுக்கு நாங்கள் விஜயம் செய்திருக்கின்றோம்.அங்கு அமைக்கப்பட்டுவரும் நவீன கடைத்தொகுதிகள்இமற்றும் வர்த்தக மையங்களை பார்க்கின்ற போது பாரிய வர்த்தக முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.ஆனால் குறிப்பாக எமது நாட்டில் ஏனைய நகரங்களுடன் புத்தளத்தை பார்க்கின்ற போது இன்னும் அந்த பழைய வர்த்தக தன்மையினையே காணமுடிகின்றது.
இந்த வெிடயம் தொடர்பில் நகர சபை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கின்ற போது அதற்கு அதற்கு எதிராக பலர் பேசுகின்றனர்.நாம் இந்த விடயம் தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளப்போவதில்லை.
1997 அம் ஆண்டு நகர சபையினை பொறுப்பெடத்ததிலிருந்து புதிய அபிவிருத்திகள் தொடர்பில் பேசிவருகின்றோம்.ஆனால் அதனை அமுல்படுத்த எமது மக்கள் முன்வராமல் உள்ளனர்.இதன் மூலம் நாம் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவுகளை சந்தித்துவருகின்றோம்.
தற்போது புத்தளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நவீன கடைத்தொகுதி தொடர்பிலும் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் விளக்கமளித்தார்.
Published by



Leave a comment