காத்தான்குடி: 148வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இயங்கும் 164சி பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதி மனித நேயம் பேணும் பாரிய சிரமதாணம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. குறித்த மனித நேயம் பேணும் பாரிய சிரமதாண நிகழ்வு இன்று (29-08-2014) வெள்ளிக்கிழமை காத்தான்குடி-04 குபா பள்ளிவாயலுக்கு அருகாமையிலுள்ள ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெற்றது.
இப் பாரிய சிரமதான நிகழ்வுக்கு காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி பொலிஸ், காத்தான்குடி குபா விளையாட்டு கழகம், (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்துக்கான ஒன்றியம், அப் பிரதேச பொது மக்கள் ஆகியோர் தமது ஒத்துழைப்புக்களையும், பங்களிப்பையும் வழங்கி இருந்தனர். இதன் போது காத்தான்குடி -04 குபா பள்ளிவாயலுக்கு அருகாமையிலுள்ள ஆற்றங்கரைரப் பகுதி மனித நேயம் பேணும் பாரிய சிரமதாணம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
இப் பாரிய சிரமதான நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகேதர, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்ளை பரப்பு செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.செல்வராஜா, 164சி பிரிவு கிராம சேவகர் றவூப் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள், காத்தான்குடி குபா விளையாட்டு கழகம், (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்துக்கான ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் உறுப்பினர்கள், காத்தான்குடி நகர சபை சுகாதாரத் தொழிலாளிகள், பொது மக்கள் என பலரும் கலந்த கொண்டனர்.
சிரமதாணம் மூலம் துப்பரவு செய்யப்பட்ட இப்பகுதியில் குப்பை கொட்டுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் ஆதை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காத்தான்குடி நகர சபையினால் அறிவித்தல் பதாதை இப்பகுதியில் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment