-டீன்பைரூஸ், எம்.எச்.எம். அன்வர்
காத்தான்குடி: காத்தான்குடி மதியன்பன் மஜீதின் ”ஆனாலும் திமிருதான் அவளுக்கு” கவிதை நுால் வெளியீட்டு விழா (29.008.2014 வெள்ளிக்கிழமை) காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லுாரியின் அர்ராஷீத் கேட்போா் கூடத்தில் பன்னுாலாசிரியா், கலாபுசணம் அல்ஹாஜ் எம்.எம்.எம்.மஹ்றுாப் கரீம் MA அவா்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக BCAS நிறவனத்தின் பணிப்பாளரும்,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ். MM அப்துர் ரஹ்மான் Bsc, அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்நிகழ்வுக்கு முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ULNM முபீன் BA/JP , KLM பரீட் JP , காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான SHM. பிர்தௌஸ் ( பிரதி அதிபர் காத்தான்குடி தேசிய பாடசாலை) ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா MA, ALM சபீல் (நழீமி) BA, மர்சூக் அஹமட்லெப்பை JP. இல்மி அஹமட்லெப்பை JP, கிராம உத்தியோகஜ்தர் எம்.அஸீஸ் JP உட்பட கவிஞர்களான TL ஜவ்பர்கான் jp, பதியதளாவ பாறுாக், கல்விமான்கள், பொது மக்கள் என அதிதிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நுாலாசிரியர் மதியன்பன் மஜீத் இக்கு அஸ்ஸஹ்றா வெளியீட்டு பணியகத்தின் தலைவர் எம்.அஸீஸ் GN/JP அவர்களினால் நினைவச்சின்னம் வழங்கப்பட்டதுடன் பிரதம அதிதி பொறியியலாளர் அல்ஹாஜ் MM அப்துர் ரஹ்மான் Bsc அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இன்றைய கவிதை நுால் வெளியீட்டு நிகழ்வின் போது பிரதம அதிதி கலந்து கொண்ட BCAS நிறவனத்தின் பணிப்பாளரும்,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ்.MM அப்துர் ரஹ்மான் Bsc, அவர்கள் முதல் பிரதியினை பெற்றுக் கொண்டார்.
Published by










Leave a reply to mohmedrislan Cancel reply