இப்படியே போனா என்ன ஆவது….? தாய்ப்பாலில் ஐஸ் பக்கெட் சவாலை நிறைவேற்றிய நடிகை!

actress– SHM

நியுயோர்க்: ஐஸ் பக்கெட் சவாலை இப்போது பெருமைக்காக பிரபல்யமாக்க ஆரம்பித்து விட்டனர் சிலர். நல்ல நோக்கத்திற்காக என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட இதை வைத்து இப்போது பலரும் விளம்பரம் தேட ஆரம்பித்துள்ளனர்.

யாரைப் பார்த்தாலும் பக்கெட்டும், தண்ணீருமாக போஸ் கொடுத்து பேஸ் புக் பக்கங்களை நிரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் ஒலிவியா வைல்ட் என்ற நடிகை தாய்ப்பாலில் குளியல் போட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இவரை ஐஸ் பக்கெட் சவாலுக்கு டயானா அக்ரோன், உள்ளிட்ட பலரும் அழைத்திருந்தனர். இதையடுத்து ஒலிவியாவும் கலந்து கொண்டு குளித்தார். ஆனால் தண்ணீர் வெள்ளையாக இருந்தது. அதுகுறித்து அவர் கூறுகையில் இது தாய்ப்பாலாகும் என்று கூறி அதிர வைத்தார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த தாய்ப்பாலை சேகரிக்க இரவு பூராவும் நான் செலவிட வேண்டியிருந்தது என்று கூறி மேலும் அதிர வைத்தார்.

ஏன் தாய்ப்பாலில் குளித்தீர்கள் என்று கேட்டால், தண்ணீர் கிடைக்கவில்லை. எனவேதான் தாய்ப்பாலில் குளித்தேன் என்று விளக்கினார் ஒலிவியா.

மக்கள் ஆச்சரியப்பட, இது தாய்ப்பால் அல்ல என பின்னர் சமாளித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

actress

Published by

One response to “இப்படியே போனா என்ன ஆவது….? தாய்ப்பாலில் ஐஸ் பக்கெட் சவாலை நிறைவேற்றிய நடிகை!”

  1. தண்ணீரை விட தாய்ப்பால் சுலபமாக கிடைக்கும் ஒன்றாக போய் விட்டது போலும்.. தாய்மார்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காக தாய்ப்பால் கொடுத்திருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டிருக்காது..

Leave a reply to Razana Manaf Cancel reply