பாதையோரமாக நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: ஏறாவூர் பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன் நேற்றிரவு 11.00 மணியளவில் வீதியோரமாக பேசிக்கொண்டிருந்த நான்குபேர் மீது அதிவேகமாக மட்டக்களப்பை நோக்கி சென்ற வேன் ஒன்று மோதியதால் இருவர் மிக மோசமாக பாதிப்படைந்தும்,மேலும் இருவர் கால்களில் உடைவு ஏற்பட்டும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,மேலதிக சிக்ச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

மோதிய வேன் தப்பிச் சென்றாலும்,அவ்வேனின் இலக்கத்தகடு (251-6949) கண்டேடுக்கப்பட்டுள்ளது.

eravur accident

ஆபத்தான நிலையில் ஏறாவூர், பெண் சந்தை வீதியை சேர்ந்த ரியாஸ் என்பவரும், பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு அருகாமையில் துவிச்சக்கரவண்டி திருத்தும் தொழில் புரியும் ரிஸ்கான் என்பவரும் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.

eravur

ஏனைய இருவரில் ஒருவர் சாரதியாக கடமைபுரியும் ஏறாவுரை சேர்ந்த பிரோஸ் என்பவரும்,மற்றையவர் மருதமுனையை சேர்ந்த சாரதி தௌபீக் என்பவருமாகும்.

மருதமுனையிலிருந்து கொழும்பு நோக்கி செல்ல வந்த வேனின் முன்லைட் வேலை செய்யாததால் ஏறாவூரில் அதனை சரி செய்ய பெற்றோல் நிரப்பு நிலையத்துக்குள் வேனை நிறுத்திவிட்டு சாரதியான தௌபீக் என்பவர் வீதியோரமாக நின்று கொண்டிருந்த மூவருடனும் பேசிகொண்டிருக்கும்போதுதான் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

eravur (2)

Published by

Leave a comment