இஸிஸ் அமைப்பில் இளைஞர்களைச் சேர்க்க முயற்சித்த 8 பேர் சவுதியில் கைது!

saudi– MJ

றியாத்: சவுதி அரேபியாவின் தலை நகரான றியாத் நகருக்கு வடக்கில் அமைந்திருக்கும் தமிர் நகரில், சவுதி இளைஞர்களை இஸிஸ் அமைப்பில் சேர்வதற்கு முயற்சித்து வந்த 8 நபர்களை சவுதி அரேபியாவின் விசேட பாதுகாப்புப் படைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஜெனரல் மன்சூர் அல் துர்கி கருத்துத் தெரிவிக்கையில்,

‘குறித்த நபர்கள் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இஸிஸ் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அந்நுஸ்ரா இயக்கத்தில் இளைஞர்களை இணைப்பதற்கு முயற்சித்து வந்தனர். இவர்களின் முயற்சியில் ஆர்வம்காட்டிய இளைஞர்களின் பெற்றோர்கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படின் தகுந்த தண்டணைகள் வழங்கப்படுவது உறுதி’ என அமன்சூர் அல் துர்கி தெரிவித்தார்.

‘கைது செய்யப்பட்டவர்கள், சவுதி இளைஞர்களை தோட்டங்களிலும், வாடிக்கை விடுதிகளிலும் வரவழைத்து சந்தித்துப் பேசி வந்ததாகவும் உள்துறை அமைச்சுக்கு தகவல்கிடைத்ததாகவும்’ அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் சுயவிபரங்களை வெளியிட சவுதி அரேபியா மறுத்துள்ளது.

Published by

Leave a comment