லண்டன்: இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் அமைந்துள்ள பஸ்தரிப்பு ஒன்றில் பஸ் நிறுத்தம் எனும் ‘BUS STOP’ இற்கு பதிலாக ‘BUP STOP’ என எழுதப்பட்டிருக்கின்றது. ஆங்கில மொழியை மாத்திரமே தேசிய மொழியாகக் கொண்டு செயல்படும் ஆங்கில தேசம், ஒரு காலத்தில் உலகை தன் காலடியில் வைத்து,
எங்கெல்லாம் ஆங்கில இராச்சியம் இருந்ததோ அங்கெல்லாம் ஆங்கிலத்தை அதிகமான நாடுகளில் குறைந்தது இரண்டாவது மொழியாக நிலைநிறுத்தி ஆங்கிலத்தின் பெருமையை உலகுக்கு கொண்டு வந்தது.
ஆனால் இன்று ஆங்கில தேசத்தின் பிரதான நகரங்களுள் ஒன்றான பிரஸ்டல் நகரில் இந்த ஆங்கில எழுத்துப் பிழை நிகழ்ந்திருக்கின்றது. இது மாத்திரமன்றி இதற்கு முன்னரும் இங்கிலாந்தில் பல தடவைகள் பஸ் நிறுத்தம் வாசகம் பிழையாக எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment