மதுபான விற்பனையை ஒழிக்கும் கேரளா மாநிலம்!

kerala / alco– SHM

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நேற்று இரவு முதல் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனால் நேற்று பகல் முழுவதும் சலுகை விலையில் இருக்கும் களஞ்சிய மதுபானங்கள் விற்றுத் தீர்த்தனர் கடை உரிமையாளர்கள்.

கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த, கேரளா முதல்வர் உம்மன் சாண்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 418 மதுபான பார்களை மூட உத்தரவிட்டார். அதன் பின்னர் 312 பார்கள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், தற்போது இயங்கி வரும் 312 மதுபான பார்களையும் ஓகஸ்ட் 25-ம் தேதி இரவு 10 மணி முதல் மூட முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. மேலும், ஓணம் பண்டிகை விரைவில் கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் மதுபான வகைகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, தங்களிடம் உள்ள மதுவை விற்பனை செய்வதில் கடை உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

செப்டம்பர் முதலாம் தேதி முதல் கேரளாவில் உள்ள 30 அரசு மதுபானக் கடைகளையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

kerala / alco
இறுதியாக மதுபானத்தை வாங்கிக்கொள்ளும் வாடிக்கையாளர்கள்

Published by

Leave a comment