டோக்கியோ: சொனி நிறுவனத்தின் ‘ஒன்லைன்’ இசை மற்றும் விளையாட்டு இணையத்தளங்கள் முடக்கப்பட்டதுடன், அந்நிறுவன நிர்வாகிக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.
ஜப்பானை தலைமையிடமாக கொண்ட சொனி நிறுவனத்தின் ஒன்லைன் இசை மற்றும் விளையாட்டு சார்ந்த இணையத்தளங்கள முடக்கிய இஸிஸ், அந்த தளத்தில் ‘சொனி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி பயணிக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்றும் போஸ்ட் போட்டுவிட்டனர்.
இதையடுத்து சொனி நிறுவனம், தனது அதிகாரிகள் யாரெல்லாம் விமான பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர் என்ற பட்டியலை எடுத்தது. அந்த பட்டியலின் மூலம், சொனியின் தலைவர் ஜோன் ஸ்மெட்லி அமெரிக்காவில் விமான பயணத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. ஜோன் இன்று, அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் இருந்து சன்டிகோ பகுதிக்கு அமெரிக்க விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அமெரிக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சொனி நிறுவனத்திடமிருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து, ஜோன் பயணித்த விமானம், போனிக்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு எதுவும் விமானத்தில் இல்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனிடையே, சொனி வலைத்தளத்தில் இஸிஸ் அமைப்பின் கொடி நாட்டப்பட்டு, இஸிஸ் அமைப்பின் கொடியுடன் ஒரு நபர் செல்வது போன்ற படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிட விரும்பவில்லை என்று சொனியும், அதன் தலைவர் ஜோன் ஸ்மெட்லியும் தெரிவித்துள்ளனர்.
தொழிநுட்பத்தைத் தன் கையில் வைத்திருக்கும் சொனியின் இணையத்தளம் இஸிஸ் அமைப்பால் முடக்கப்பட்டமை ஆச்சரியத்தைத் தோற்றுவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment