‘ஐஸ் Bபக்கட்’ கேளிக்கையில் உயிரைவிட்ட முதலாவது இளைஞன்!

ice– MJ

லண்டன்: ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கமருன் லன்காஸ்டர் எனும் 18 வயதுடைய இளைஞன் ‘ஐஸ் Bபக்கட்’ சவாலில் தனது உயிரைவிட்ட பரிதாபம் ஸ்கொட்லாந்தை மாத்திரமன்றி முழு உலகையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது.

ஐஸ் குளிப்பின் பின்னர் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

சமூகவலைத்தளங்களின் கேளிக்கைகளில் தற்பொழுது ‘ஐஸ் Bபக்கட்’ சவால்கள் உலக மக்களை ஈர்த்துவரும் ஓர் நிகழ்வாக இருந்துவந்த நிலையில், தற்பொழுது மரணகேளிக்கையாக மாறியிருக்கின்றது.

ice
மரணமான இளைஞன் கமரூன் லன்காஸ்டர் (18)

ஏ.எல்.எஸ். நன்கொடைக்காக இந்த ‘ஐஸ் Bபக்கட்’ குளியல் ஆரம்பத்தில் சில பிரபலங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் பின்னர் சமூகவலைத்தளங்களில் காண்பிக்கப்படும் தனிநபர்களின் கேளிக்கை ஐஸ் பக்கட் குளிப்பில், அதிகளவான இளைஞர்கள், எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் ஐஸ்கட்டிகளை வாளியில் நிரப்பி, குளித்து தங்களது ‘வீர’த்தை பதிவேற்றி வருகின்றனர்..

‘மிகவும் அமைதியான சுபாவமுடைய தங்களது மகன், அதிகமான நண்பர்களைச் சேர்த்திருந்தான். அவனது சிறுவயது மரணம் எங்களுக்கு ஓர் பாரிய இளப்பாகும்’ என மரணமான இளைஞனின் தந்தை லன்காஸ்டர் கவலை தெரிவித்தார்.

‘ஐஸ் Bபக்கட்’ குளிப்பு கேளிக்கையில் இவ்விளைஞனின் மரணம் முதலாவதாக பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment