இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் யுத்த நிறுத்தம்: பாரிய நெருக்கடியில் இஸ்ரேல்!
– MJ
காஸா: எகிப்தின் வேண்டுகோளிற்கிணங்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையிலான யுத்த நிறுத்தம் உள்ளுர் நேரப்படி இரவு 7மணிக்கு, 26-08-2014 செவ்வாய்க்கிழமையிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் இஸ்ரேல் நகரங்களில் தொடர்ந்தும் ஏவுகணை அபாய சமிக்கை ஒலிகள் கேட்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்பார்க்காத அளவுக்கு ஹமாஸின் தாக்குதல்கள் இருக்கின்றன. அயர்ன் டோமால் ஒரு சில ஏவுகணைகளை மாத்திரமே தடுத்து நிறுத்த முடிந்ததே தவிர, இஸ்ரேலுக்குள் விழும் நூற்றுக்கணக்கான ஹமாஸின் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கின்றது.
கடந்த சில நாட்களில் 120 ஏவுகணைகளை அயர்ன் டோம் தடுத்து நிறுத்தியதாகவும், ஆனால் 100க்கும் மேற்பட்ட காஸாவின் ரொக்கட்டுக்கள் இஸ்ரேல் நகரங்களுக்குள் விழுந்து வெடித்தாகவும் இஸ்ரேல் இன்று காலை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தது.
இஸ்ரேலியர்களின் வீட்டில் வீழ்ந்த காஸாவின் ரொக்கட்டுக்கள்
இஸ்ரேலின் பாதுகாப்பு வியூகங்களை மென்மேலும் அதிகரிக்கவும், சில மாற்றங்களையும் ஏற்படுத்தவுமே அடிக்கடி இஸ்ரேல் தற்காலிக யுத்த நிறுத்த கோரிக்கையை முன்வைக்கின்றது.
ஐ.நாவை இஸ்ரேல் பகைத்துக் கொண்டதால் அமெரிக்கா நேரடியாக இஸ்ரேல் சமாதான விடயத்தில் மூக்கை நுழைக்காமல், அமெரிக்காவின் கைக்கூலியான தற்போதய எகிப்து அரசாங்கத்தைவைத்து இருதரப்பு சமாதான பேச்சு என்ற பேரில் இஸ்ரேலின் கோரிக்கைகளை அமெரிக்கா கச்சிதமாக நிறைவேற்றுகிறது.
ஹமாஸின் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்காதவரை எந்த பேச்சுக்கும் இணங்க முடியாது என ஹமாஸ் கடந்த 50 நாட்களாக கூறிவருகிறது. இதேபோல் ஹமாஸின் கோரிக்கையை தாங்கள் ஏற்கப்போவதில்லை எனவும், யுத்தமே ஒரேவழி எனவும் இஸ்ரேல் வீராப்பு விடுத்தது. ஆனால் இஸ்ரேலுக்குள் விழும் காஸாவின் ரொக்கட்டுக்களால் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத நிலையில் இஸ்ரேல் இருந்தாலும், மக்கள் அச்சத்தால் ஓடி ஒழியும் நிலை இஸ்ரேலில் ஏற்பட்டிருக்கிறது.
ஏவுகணை அச்சத்தால் ஓடி ஒழியும் இஸ்ரேலியர்கள்
அதுமாத்திரமன்றி, இஸ்ரேலின் அந்நியச் செலாவணி, உற்பத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தகங்கள் பெரிதும் பாதிப்படைந்திருக்கின்றன. கடந்த மாதம் நிறுத்தப்பட்ட இஸ்ரேலுக்கான உலக நாடுகளின் விமான சேவைகள் இன்னும் தொடராத நிலை நீடித்து வருகிறது. காஸா மக்களைக் கொன்றொழித்தாலும், கொல்லப்பட்ட மக்களுக்கு அதிகமாக காஸா மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்தவண்ணமிருக்கின்றன.
இதன்காரணமாக உளரீதியாக தற்பொழுது இஸ்ரேல் பாதிப்படைந்திருக்கின்றது. கடந்த 50 நாள் யுத்தத்தில் ஹமாஸ் ஒருபோதும் யுத்த நிறுத்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஒன்று வெற்றி அல்லது வீர மரணம் என்ற நோக்கில்தான் அங்குள்ள போராளிகளும் மக்களும் இருக்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவுமே சில நேரங்களில் பின்வாங்கும் நிலை அங்கு இருக்கின்றது.
எப்படி இருந்தபோதிலும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் தன்மானப் பிரச்சினை. காஸா மக்களில் கைவைத்தால், கொலைகளைக் கண்டு, ஹமாஸ் தங்கள் காலில் விழும் என அமெரிக்காவும் இஸ்ரேலும் நினைத்திருந்தது. ஆனால் பருப்பு வேகவில்லை.
காஸா போராளிகள்
மாறாக ரஷ்யாவுக்குள் மூக்கை நுழைத்த அமெரிக்கா மூக்குடைபட்டு வைத்த காலை எடுக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஈராக்கிலும், சிரியாவிலும் தனது திட்டம் நிறைவேற முடியாத கவலை, ஈரானை வீழ்த்த முடியாத தன் இயலாமை இவ்வாறு அமெரிக்காவுக்கு பல நூறு சிக்கல்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment