அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லுாரிக்கு புதிய பயிலுனர்கள் அனுமதி

add college– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத்

அட்டாளைச்சேனை: கற்பித்தல் தேசிய டிப்ளோமா (2014-2016) ஆம் கல்வியாண்டுக்கான புதிய பயிலுனர்களை சேர்த்துக்கொள்வதற்கான பதிவுகள் கடந்த 2014.08.23,24 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது.

கடந்த சனிக்கிழமை கணிதம், விஞ்ஞானம், விஷேட கல்வி மற்றும் இஸ்லாம் ஆகிய பாடநெறிகளுக்கான பதிவுகளும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பபாடநெறிக்கான பதிவு இடம்பெற்றது.

எதிர்வரும் தினங்களில் வர்த்தக பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் இவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 2014.09.02 ம் திகதியில் இருந்து ஆரம்பமாகும் என கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.

add college

nawas

addalaichenai

Published by

Leave a comment