குருக்கள்மடம்: தோண்டப்படும் ஜனாஸாக்கள்.. இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டதா?

kurukkalmadam– அபூஸைனப்

காத்தான்குடி: கடந்த 1990ம் ஆண்டு மட்டு-கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் குருக்கள்மடம் எனும் தமிழ் கிராமத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, புதைக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் ஜனாஸாக்களை தோண்டி எடுக்கும் முயற்சிகள் சுமார் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றன.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபிகளாரிடத்தில் வந்திருந்த ஒரு கூட்டத்தினர், எங்கள் ஊரில் இஸ்லாத்தைப் போதிப்பதற்காக மார்க்க அறிஞர்களை தந்துதவுமாறு நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்டதற்கிணங்க, நபி (ஸல்) அவர்கள் 70 ஹாபிழ்களைத் தேர்வு செய்து, அனுப்பி இருந்தனர். இவர்கள், சிறந்த ஹாபிழ்களாகவும், விறகு சேகரித்து தங்களது வாழ்க்கையை வாழ்ந்துவந்த ஏழைச் சஹாபிகளாகவும் இருந்தனர்.

இவ்வாறு ஏமாற்றி அழைத்துச் சென்ற கூட்டத்தினர் அத்தனை ஸஹாபாக்களையும் ஓர் இடத்தில் படுகொலை செய்து புதைத்துவிட்ட செய்தி பின்னர் நபிகளாரிடத்தில் தெரிவிக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்றுவரைக்கும் அந்த ஸஹாபாக்களின் ஜனாஸாக்களைத் தோண்டி எடுத்து நபி (ஸல்) அவர்களோ, அதன் பின்னர் வந்த ஹலீபாக்களோ இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவில்லை.

kurukkalmadam

இவ்வாறிருக்க, குருக்கள்மடத்தில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் எமது சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுவித்து, நல்லடக்கம் செய்தல் எனும் நோக்கத்தில் இந்த புதைகுழி தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காத்தான்குடியின் ஆளும் அரசியல் தரப்புக்களிலிருந்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலமாக்களையும், தஃவா இயக்கங்களையும் தன்னிகரே கொண்டமைந்துள்ள காத்தான்குடியிலிருந்து இதுவரைக்கும் இவ்விவகாரம் சம்பந்தமாக எந்த மார்க்க அறிஞர்களோ, மார்க்க இயக்கங்களோ மக்களிடத்தில் தெளிவுபடுத்தப்படாமல் இருப்பது மக்களிடத்தில் குழப்பங்களைத் தோற்றுவித்து வருகின்றன.

kurukkalmadam

புதைகுழி தோண்டப்பட்டால் ஜனாஸாக்கள் இன்று அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா போல் இருக்குமா, முஃமின்களின் ஜனாஸாக்களை மண் தீண்டாது. எனவே ஜனாஸாக்கள் சிதைவடையாமலேயே இருக்கும் எனவும், இல்லை, அவ்வாறு இருக்காது வெரும் எழும்புத்துண்டுகளே இருக்கும். மண் தின்றால் முஃமின் இல்லையா போன்ற பல சந்தேகங்களும், கருத்து முரண்பாடுகளும் மக்களிடத்தில் இருந்து வருகின்றன.

கடந்த 23 வருடங்கள் இல்லாத அக்கறை இந்த 24வது வருடத்தில் ஏன் வந்தது? யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் வரைக்கும் அமைந்த வட-கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருட யுத்தத்தில் புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட எத்தனையோ முஸ்லிம்களின் புதைகுழிகள் இருக்கையில், ஏன் குருக்கள்மடம் மாத்திரம் குறிவைக்கப்படுகிறது என்ற கேள்விகளும் இங்கு எழுகின்றன.

இது உண்மையில் அரசாங்கத்தை குளிரவைக்க எடுக்கப்படும் ஓர் முயற்சியே அன்றி, வேறொன்றுமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இது சம்பந்தமாக இஸ்லாமிய சட்டம் என்ன? இஸ்லாமிய வரலாற்றில் காபிர்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஜனாஸாக்கள் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு இஸ்லாமிய முறைப்படி ஜனாஸா கடமைகள் நிறைவேற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதா எனபதை மார்க்க அறிஞர்கள் தயவுசெய்து மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.

உண்மையில், இவ்விவகாரம் மார்க்கத்திற்கு முரணாக இருக்குமிடத்து, தயவு செய்து இவ்விடயத்தில் அதிக பிரயத்தனமெடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் முஸ்லிம் அதிகாரிகளுக்கும் எடுத்துக்கூறுமாரும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

kurukkalmadam

Published by

One response to “குருக்கள்மடம்: தோண்டப்படும் ஜனாஸாக்கள்.. இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டதா?”

  1. Please research by Islam. Not a Political vise.

Leave a reply to mohmedrislaam Cancel reply