2020இல் தனிநபர் வருமானம் 7500 அமெரிக்க டொலர்!!

money-wallet-icon[1]கொழும்பு: பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இவ்வருடம் நிறைவுறும் இவ்வேளையில் 7.8 வீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ள இலங்கை, 2020 ஆம் ஆண்டாகும் போது தனிநபர் வருமானமாக 7500 அமெரிக்க டொலர்களையும்.

2035 ஆண்டாகும் போது முன்னேறிய பொருளாதாரத்தை அடைவதையும் இலக்காகக் கொண்டுள்ளது என்று நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கை: எழுச்சி பெறும் தேசம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள நாலாவது பாதுகாப்பு கருத்தரங்கு இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் தயா ரட்நாயக்கா தலைமையில் நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது.

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் விசேட பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலாநிதி ஜயசுந்தர தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான் இந்நாட்டுக்கு செயல்திறன் மிக்க சுதந்திரமானஇ சமாதான சூழலை 2005 ஆம் ஆண்டின் பின்னர் பெற்றுக் கொடுத்தார். அத்தோடு மிகவும் சிறந்த பொருளாதார மூலோபாயத்தை இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்திருப்பவரும் அவரேயாவார்.

அந்த வகையில் தற்போது 7.8 வீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ள இலங்கை அடுத்தாண்டாகும் போது 4000 அமெரிக்க டொலர்களைத் தனிநபர் வருமானமாகக் கொண்டிருக்கும். இதனை 2020 ஆம் ஆண்டாகும் போது 7500 அமெரிக்க டொலர்களாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம். அதேநேரம் 2035 ஆம் ஆண்டாகும் போது இந்நாட்டிற்கு முன்னேறிய பொருளாதாரத்தைப் பெற்றுக் கொடுப்பதும் ஜனாதிபதி அவர்களின் திட்டமாகும்.

கிராமிய பிரதேசங்களை மையப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவது போன்று வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு உயிர்ப் பல்வகைமைப் பாதுகாப்புஇ சுற்றாடல் மேம்பாடு. உட்கட்டமைப்பு அபிவிருத்திஇ தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாதவகையில் சமாதானம்இ சட்டம்இ ஒழுங்கை பேணுதல் என்பன அவசியமானது. நாட்டின் பொருளாதாரம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இவை பெரிதும் உதவும்.

அதனால் மஹிந்த சிந்தனை தேசியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டங்களில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேநேரம் எழுச்சி பெற்று வரும் பொருளாதார அபிவிருத்தி குறித்து நாம் தெளிவுபெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அண்மையில் வெளியான ‘த எக்கனமிஸ்ட் சஞ்சிகையில்’ ‘ஜி – 7 நாடுகளின் உற்பத்திகள் ஓரிடத்தில் தங்கி இருப்பதாகவும் இதற்கு அந்நாடுகளில் முதுமை அடைகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அந்நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகள் நீண்டகாலமாக நவீனப்படுத்தப்படாததும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனால் அந்நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசாங்கம் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் மறுசீரமைப்பு யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆசிய – பசுபிக் பிராந்தியம் உலகளாவிய பொருளாதார தரம் குறித்து எடுத்துள்ள நிலைப்பாடானது புதிய பொருளாதார களத்தை உருவாக்கியுள்ளது.

இதேவேளை ஒழுங்குபடுத்தப்படாத சூழலில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு நிதி முகாமைத்துவத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. அத்தோடு பரந்துபட்ட பயங் கரவாதமானது கப்பல் மற்றும் விமான சேவைகள். நிதி பரிமாற்றங்களுக்கும்.

வர்த்தகம்இ சுற்றுலாஇ துறைஇ முதலீடு ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதேநேரம் கணனி குற்றச் செயல்கள்இ போதைப்பொருள் கடத்தல்இ ஆட்கடத்தல் என்பனவும் பூகோளப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்களாகும்.

இந்த அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கவும் அவற்றை முகாமை செய்யவும் நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். சவால்கள் எமக்கு புதியவை அல்ல. வரலாற்றில் ஒவ்வொரு தோல்வியும் எமக்குப் பாடமே. இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் இரண்டாம் தரமானதல்ல. பெருமைக்குரிய சிறப்பான நாட்கள் எமக்கும் இருந்துள்ளன.

சில சந்தர்ப்பங்கள் எமக்கு சோதனையாகவும் அமைந்துள்ளன. எம்மை பொறுத்தவரை 2005 வரலாறாகிவிட்டது. இப்போது 2014 முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது. எனினும் 2020 ல் 2014 வரலாறாகிவிடும். ஆகவே வரலாற்றுத் தவறுகள் மீண்டும் ஏற்படுவதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எனவே தேசியப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய ஐந்து தூண்களிலும் உறுதியான அடித்தளமிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதை உறுதிப்படுத்தும் தேவை எமக்குள்ளது.

அதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்புக்கூறும் வகையில் நாம் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாம் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதே அவசியம்.

உதாரணத்திற்கு உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள எபோலா வைரஸ் குறித்தும் நாம் விழிப்புடனேயே இருக்கின்றோம்.

எமது ஜனாதிபதி அவர்கள் தேவை எதுவோ அதனைச் செய்வதற்கு ஆரம்பி யுங்கள். அதன் பின் முடிந்தது எதுவோ அதனைச் செய்யுங்கள். அப்போது செய்ய முடியாதது எதுவோ அதனை செய்வதாக உணர்வீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செயற்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இக்கருத்தரங்கு அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வடமாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Published by

One response to “2020இல் தனிநபர் வருமானம் 7500 அமெரிக்க டொலர்!!”

  1. அனைத்திலும் இராணுவ வாடை! சொல் விளையாட்டு! பாதுகாப்பு என்ற பெயருக்குள் சித்துக்கள்!

    எழுதுவதும், பேசுவதும், அறிக்கை விடுவதும் போலல்ல வாழக்கை என்பதையும், பேசுவோர் அறிந்து கொள்ள வேண்டும்.

Leave a reply to nizamhm1944 Cancel reply