காத்தான்குடி: பலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேலினால் மிலேச்சத்தனமாக பாதிக்கப்பட்டதை விளக்கி கடந்த 08.08.2014 அன்று நாம் மாநாடு நடாத்தியிருந்தோம். இஸ்ரேலுடனான உறவை இலங்கை அரசாங்கம் முறித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவில் கையெப்பமிடும் வாய்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டொருக்கு வழங்கப்பட்டிருந்தது.
பெறப்பட்ட கையொப்பங்கள் இன்று 15.08.2014 பிற்பகல் 2:00 மணிக்கு பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் SH. முஸம்மில் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜமாஅத்தின் தலைவர் மௌலவி ஷாபி அவர்கள் கையளிப்பதையும் அருகில் ஜமாஅத் நிர்வாகிகள், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் இருப்பதையும் படங்களில் காணலாம்.
Published by




Leave a comment